பார்வையை பறித்த பட்டாசுகள்
பெங்களூர்:
மக்களைத் துன்புறுத்தி வந்த கொடிய நரகாசுரன் கொல்லப்பட்ட நாளைத் தான் தீபாவளியாகக் கொண்டாடிவருகிறோம்.
ஆனால் ஆண்டு தோறும் அன்றைய தினத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் பலரும் வாழ்க்கையின் கடைசிஅத்தியாயத்திற்கே வந்து விடுகின்றனர்.
தேவையான பாதுகாப்புகளுடன் பட்டாசுகளைக் கொளுத்துமாறு ஒவ்வொரு ஆண்டும் அரசும், டி.விக்களும்,ரேடியோவும் அலறிக் கொண்டு தான் இருக்கின்றன. இருந்தாலும் விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல்தான் போய்விடுகிறது.
பெங்களூரில் இது போன்ற சம்பவங்கள் இந்த ஆண்டு கொஞ்சம் அதிகம் தான். கடந்த மூன்று நாட்களில் மட்டும்60க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பட்டாசுக் காயம் என்று மின்டோ கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் 5 பேரின் கண் பார்வை முழுவதுமாகப் போய் விட்டது. அந்த அளவுக்கு பட்டாசுகளால்அவர்களுடைய கண்கள் முழுவதுமாக வெந்து போய்விட்டன.
சோகம் என்னவென்றால் இந்த 60 பேர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் தான்.இவர்களிலும் முக்கால்வாசிப் பேர் அடுத்தவர்கள் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களே.
ப்ரியா என்ற 15 வயதுப் தமிழ் சிறுமி மற்றவர்கள் பட்டாசு கொளுத்திக் கொண்டிருப்பதை மகிழ்ச்சியோடுவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண் தான். ஆனால் எங்கிருந்தோ சீறிப் பாய்ந்து வந்த ராக்கெட் வெடிஅவளுடைய இடது கண்ணைத் துளைத்தது.
"எப்படியாவது அவளுடைய கண் பார்வை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும்செலவழிக்க நாங்கள் தயார்" என்று ப்ரியாவின் குடும்பத்தினர் டாக்டர்களிடம் கூறிப் பார்த்து விட்டனர்.
ஆனால் டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். ப்ரியாவின் இடது கண் பார்வை போனது, போனது தான். அந்தஅளவுக்கு அது மோசமாகச் சிதைந்து விட்டது என்று அவர்கள் கூறினர்.
ஒசூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சுமார் 8 வயது சிறுவனும் கண்களில் ரத்த வெள்ளத்துடன் வீட்டிற்குவந்துள்ளான்.
பதறிப் போன பெற்றோர்கள் விசாரித்ததில், பள்ளியிலிருந்து தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போதுபட்டாசு வெடித்துச் சிதறி கண்களில் பாய்ந்து விட்டதாகக் கூறினான் அவன். அவனுக்கும் டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்துக்களுக்கு யாரைத் தான் குறை சொல்ல முடியும்?
"யாரையும் குறை சொல்ல முடியாது. அதனால் தான், இது போன்ற ராக்கெட் வெடிகளை மட்டுமல்ல. பொதுவாகஅனைத்து வெடிகளையுமே வெடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்" என்று மின்டோ கண் மருத்துவமனைடாக்டர் வத்சலா மிகவும் ஆத்திரத்துடன் நமது நிருபரிடம் கூறினார்.
கண்கள் நிறைய ரத்த வெள்ளத்தோடு வருபவர்களைப் பார்த்து மிகவும் நொந்து போய் தான் அவர் இவ்வாறுகூறினார்.
தமிழகத்தில்விபத்துக்கள் குறைவு:
இத்தனை சோகங்களுக்கிடையிலும் ஒரு ஆறுதல் என்னவென்றால் இந்த ஆண்டு தமிழகத்தில் இதுபோன்றபட்டாசு விபத்துச் சம்பவங்கள் குறைவு என்பது தான்.
கடந்த ஆண்டை விட பட்டாசுகளினால் ஏற்படும் தீ விபத்துக்கள் இந்த ஆண்டு குறைவாகவே நடந்துள்ளதாகதமிழக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பட்டாசுகளால் கடந்த ஆண்டு 125க்கும் மேற்பட்ட தீபாவளியன்று நடந்தன.
ஆனால் இந்த முறை 35 இடங்களில் மட்டுமே பட்டாசு தொடர்பான அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. அதிலும்பெரும்பாலும் ராக்கெட் போன்ற பட்டாசுகளினால்தான் தீவிபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
பல இடங்களில் ராக்கெட் வெடிகள் விழுந்ததில் குடிசைகள், ஓலைகள் போன்றவை பற்றிக் கொண்டன.இருப்பினும் உயிரிழப்போ, கண் பார்வை பாதிப்போ ஏற்படவில்லை. லேசான காயங்கள் மட்டுமேஏற்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பத்தாயிரம் வாலா வெடி போன்றவை பெரும்பாலும் உபயோகிக்கப்படவில்லை என்பதால்,அது தொடர்பாக எந்த விபத்தும் நடக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications