சென்னையில் மழைக்கு வீடிழந்தவர்களுக்கு 2 லட்சம் உணவுப் பொட்டலங்கள்
சென்னை:
சென்னையில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 2 லட்சம் உணவுப் பொட்டலங்கள்வழங்கப்பட்டன.
சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைஇழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாநகராட்சி பள்ளிகள், கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வீடுகளை இழந்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மாநிலஉள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இந்த உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தார்.
மொத்தம் 2 லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
மழை நிவாரணப் பணிகளை துரித கதியில் மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நகரின் பல்வேறுபகுதிகளுக்கும் நேரில் சென்று அவர் நிவாரணப் பணிகளை பார்வையிட்டார்.
சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில்செயல்படுமாறு நேற்று தான் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்னும் மூன்று நாட்களுக்கு கனத்த மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறிக் கரையைக் கடந்தால் எவ்வாறுசமாளிப்பது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பல கடலோர மாவட்டங்களில்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் ஏற்பட்டால், கடலோரப் பகுதி மீனவர்களையும் மக்களையும் பாதுகாப்பானஇடங்களில் தங்கவைப்பதற்காக மாநகராட்சிப் பள்ளிகளும், சில கோவில்களும் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு கன்ட்ரோல் அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் முழு வீச்சில்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அதே போல் அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான அளவுக்கு மருந்துகள்,மாத்திரைகளை இருப்பில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரிசி, எண்ணெய், கெரசின் போன்ற அடிப்படை வசதிகளையும் தேவையான அளவுக்கு இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு குடிபொருள் விநியோகத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அணைகளில் "மளமள" நீர் உயர்வு:
இதற்கிடையே தமிழகத்தில் பல அணைகளிலும் நீர் மட்டம் "கிடுகிடு"வென உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இன்று காலை 65.59 அடி நீர் மட்டம் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9,051 கன அடி வீதம்நீர் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் பெரியாறு அணை நீர் மட்டம் 121.6 அடியைத் தொட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,218 கன அடிநீர் வந்து கொண்டிருக்கும் வேளையில், விநாடிக்கு 1,100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
வைகை அணையிலும் விநாடிக்கு 2,008 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விநாடிக்கு 30 கன அடி நீர்மட்டுமே வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 56.9 அடியாக உள்ளது.
-->
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
பெங்களூர் ஹோட்டலில் பெயரை பார்த்து ஏமாந்த நபர்.. அப்பள பொறிக்கு இப்படி ஒரு பெயரா? பில்லை பாருங்க -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம்












Click it and Unblock the Notifications