"மதுரையில் அடுத்த ஏப்ரல் முதல் உயர் நீதிமன்றக் கிளை செயல்படும்"
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படத் துவங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறினார்.
நாடு முழுவதும் சட்டப்பணிகள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்துசென்னையில், நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது, நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியதாவது:
அனைருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும், விரைவாக நீதி கிடைக்க வேண்டும், நீதிதித்துறை சம்பந்தமான அறிவுஅனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 1997ம் ஆண்டு ஒரு சட்டம் அமல் படுத்தப்பட்டது.
இந்த 3 நோக்கங்களுக்காக சட்டப்பணிகள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டம் வெளியிடப்பட்டநாள் 09.11.1997 என்பதால், ஆண்டு தோறும், நவம்பர் 9ம் தேதியை சட்டப்பணிகள் தினமாகக்கொண்டாடுகிறோம்.
சட்டப்பணி முகாம்கள் மூலம், மக்களுக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 49 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இவற்றில் 30விரைவு நீதிமன்றங்கள் இந்த மாத இறுதிக்குள் செயல்படத் துவங்கும். முதல்கட்டமாக 10ம் தேதி காஞ்புரத்திலும்,செங்கல்பட்டிலும் 2 விரைவு நீதிமன்றங்கள் துவங்கப்படுகின்றன.
மீதமுள்ள 19 விரைவு நீதிமன்றங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் துவங்கும்.
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக அதற்கு ரூ.37கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி காரணமாக, கட்டுமானப் பணிகளில்தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், விரைவில் கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அது செயல்படத்துவங்கும் என்றார் நீதிபதி சுபாஷன் ரெட்டி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications