போலீசாரை கொல்ல முயன்ற "செக்ஸ் ஓட்டல்" அதிபர் கைது
சென்னை:
ஹோட்டல் நடத்தி அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பெண்களை அறிமுகப்படுத்தி விபச்சாரம் செய்து வந்த 2பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
எழும்பூர் பகுதியில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன. இப்பகுதியில் ரவி என்பவரும் ஒரு ஹோட்டல் நடத்திவருகிறார்.
இவர் தனது ஹோட்டலுக்கு தங்க வருபவர்களிடம் பெண்களைக் காட்டி, ஆசையூட்டி விபச்சாரத்திற்கு ஏற்பாடுசெய்வாராம். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் அருகே காரில் சென்று கொண்டிருந்த ரவியைப் பிடிக்க போலீஸ் படைஅங்கு விரைந்தது.
போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சித்தார் ரவி. இதில் 2 போலீஸாருக்குக் காயம்ஏற்பட்டது. பின்னர் காரை நிறுத்தாமல் ரவி வேகமாகச் சென்று விட்டார்.
இதனால் போலீஸார் சிறிது அதிர்ச்சி அடைந்தாலும் உடனடியாகச் சுதாரித்து ஜீப்பில் துரத்திச் சென்று ரவியைமடக்கிப் பிடித்தனர்.
ரவியுடன் சேர்ந்து காரில் இருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர்.
-->


Click it and Unblock the Notifications
