""98 சதவீத மக்களுக்கு என்ன செய்தீர்கள்?""- ஜெ.க்கு இளங்கோவன் கேள்வி
சென்னை:
"2 சதவீத அரசு ஊழியர்களுக்கு ஒன்றும் செய்ய விரும்பாத அதிமுக அரசு மீதமுள்ள 98 சதவீத மக்களுக்காகசெய்துள்ள நல்ல காரியங்கள் தான் என்ன?" என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன்கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதமே உள்ள அரசு ஊழியர்களுக்காக எவ்வளவு தான் செய்வது,அவர்களுக்கே செய்து கொண்டிருந்தால் மற்ற மக்களுக்கு என்ன தான் செய்வது என்று புலம்பியுள்ளார் முதல்வர்ஜெயலலிதா.
நான் அவரைப் பார்த்து கேட்க விரும்புவது: 2 சதவீத அரசு ஊழியர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது என்றுகூறியுள்ள நீங்கள் மீதமுள்ள 98 சதவீத மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளீர்கள்?
சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியாகி விட்டது. நெசவாளர்களை வறுமையில் வாட விட்டீர்கள்.இலவச வேட்டி, சேலையை நிறுத்தி விட்டாயிற்று. இலவச மின்சாரம் நிற்கப் போகிறது. நெல் கொள்முதல் நின்றுவிட்டது. அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், சமத்துவபுரம் திட்டம் என அத்தனை மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.
இத்தனையையும் செய்து விட்டு 98 சதவீத மக்களுக்காக நல்லது செய்யப் போகிறேன் என்று ஜெயலலிதாகூறுவாரேயானால் அதை யாரும் நம்ப மாட்டார்கள்.
பதவிக்கு வந்தவுடனேயே கஜானா காலியாகி விட்டது என்று கூறுகிறது அதிமுக அரசு. மாயமந்திரம் ஏதும் நடந்துகஜானா காலியாகி விட்டதா என்று கேட்டுள்ளார் இளங்கோவன்.
-->
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications