ரவுடி வீரமணி சென்னை சிறைக்கு மாற்றம்
சென்னை:
திருத்துறைப்பூண்டியில் சரணடைந்து, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென்னை ரவுடி வீரமணி சென்னைசிறைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த அக்டோபர் 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சாட்சி சொல்லவந்த ஒருவரைக் கடத்திச் சென்றுவெட்டிய வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி வீரமணி போலீசாரால் தேடப்பட்டுவந்தார்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி திருத்துறைப்பூண்டியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வீரமணி சரணடைந்தார்.இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியிலிருந்து தன்னை சென்னை சிறைக்கு மாற்றவேண்டும் என்று கோரி திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில்வீரமணி ஒரு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சியிலிருந்து சென்னை சிறைக்குவீரமணியை மாற்ற அனுமதியளித்தார்.
இதையடுத்து, நேற்று(வியாழக்கிழமை) அவர் பலத்த பாதுகாப்புடன் சென்னை சிறைக்கு கொண்டுவரப்பட்டார்.இவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸ் தரப்பில் இன்று மனுதாக்கல் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications