வைகோவுடன் சந்திப்பு: விஷமத்தனம் செய்வதா?- கருணாநிதி கண்டனம்
சென்னை:
திமுகவுடன் மதிமுக விரைவில் இணையும் என்பது போல வந்துள்ள செய்திகள் எல்லாம் முழுக்க முழுக்ககற்பனையானவை தான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பொடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோவைகருணாநிதி கடந்த 5ம் தேதி சென்று சந்தித்தார்.
இவர்களுடைய சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளன. எந்த நேரத்தில்வேண்டுமானாலும் திமுகவுடன் மதிமுக இணையலாம் என்றும் செய்திகள் வெளியாகத் தொடங்கின.
இது போன்ற செய்திகளை இரு தரப்பினருமே மறுத்து வந்தாலும் கருணாநிதி இன்று தான் இவற்றுக்கு மறுப்புதெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனைமதிமுகவைச் சேர்ந்த சிலர் வந்து பார்த்தனர்.
அதற்குப் பதிலாகவே நானும் வைகோவைச் சென்று பார்த்தேன். ஒரு தம்பியை அண்ணன் சென்றுபார்ப்பதில்லையா? அது போலத் தான் இதுவும்.
அரசியல் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. அண்ணன்-தம்பி பாசத்தில் தான் சென்று பார்த்தேன்என்று நான் கூறியும் அதை விஷமத் தனத்தோடு பார்ப்பதும் செய்தி வெளியிடுவதும் அண்ணன்-தம்பி உறவையேகொச்சைப்படுத்துவது போலாகும்.
ஆனால் அவருடைய மனைவியும் என்னுடைய மனைவியும் கூடிப் பேசித் தான் எங்களுடைய இந்தச் சந்திப்புக்குஏற்பாடு செய்தனர் என்று சில பத்திரிக்கைகள் கட்டுக் கதைகளை விட்டுள்ளன.
இது தான் எனக்குப் பெரும் வேதனை அளிக்கிறது. வைகோவின் மனைவி ரேணுகா தேவியும் என் மனைவிராஜாத்தி அம்மாளும் சமீப காலத்தில் சந்திக்கவே இல்லை. எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள்இவ்வாறு இழுக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
அதே போல் ஜாமீனுக்கு விண்ணப்பிக்குமாறு நான் வைகோவிடம் கூறியதாகவும் வேறு ஒரு செய்திவெளியாகியுள்ளது. இதுவும் உண்மைக்குப் புறம்பானதே. நான் அவரிடம் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்என்று கூறவே இல்லை என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-->
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications