மாறனுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலிமாறன் மேல் சிகிச்சைக்காக அடுத்த ஓரிரு நாட்களில் அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்.
மாறனுடைய செயற்கை இருதய வால்வில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதால் அவருடைய உடல் நலம்பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 23ம் தேதி அவர் அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
மற்றொரு அறுவைச் சிகிச்சை செய்து பூஞ்சை தாக்கிய செயற்கை இருதய வால்வு அகற்றப்பட்டு, வேறொரு வால்வுபொருத்தப்பட்டது. ஆனாலும் பூஞ்சைத் தொற்று அவருடைய ரத்தத்தில் கலந்து விட்டதால், மாறனின் சிறுநீரகம்,நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து மாறன் தொடர்ந்து உயிருக்குப் போராடி வருகிறார். அவருடைய சிறுநீரகத்திற்குச் சென்று வரும்ரத்தம் தினமும் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்படுகிறது (டயாலிசிஸ்). அப்பல்லோ டாக்டர்களும் அவரைதினமும் 24 மணி நேரமும் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவரும் மாறனின் மாமாவுமாகிய கருணாநிதி இன்று காலை பிரதமர் வாஜ்பாயுடன்தொலைபேசி மூலம் பேசினார். அப்போது மாறனுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பது குறித்து இருவரும்பேசினர்.
இதையடுத்து திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாறனுக்கு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ளஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் அவர்அங்கு கொண்டு செல்லப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் மாறனை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-->
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications