பரம ஏழைகளுக்குத்தான் இலவச வேட்டி-சேலை: பன்னீர்
சென்னை:
வேட்டி சேலை வாங்கும் திறன் இல்லாத பரம ஏழைகளுக்கு மட்டுமே, இந்த ஆண்டு இலவச வேட்டி சேலைவழங்கப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
கடந்த 1991ம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலைகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு இவ்வாறு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் கிராமப்புறங்களில் ரூ.269.07க்கு குறைவாகமாதவருமானம் உள்ளவர்களுக்கும், நகர்ப்புறங்களில் ரூ.381.04க்கு குறைவாக மாத வருமானம் உள்ளவர்களுக்குமட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 80 லட்சம் சேலைகளும், 73 லட்சம் வேட்டிகளும் ரூ.110 கோடி செலவில் வழங்கப்பட்டன. இந்தஆண்டு, 43 லட்சம் குடும்பத்தினருக்கு மட்டும், ரூ.90 கோடி செலவில் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து முதல்வர் பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
இலவச வேட்டி, சேலை வழங்குவதை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். வேட்டி, சேலை வாங்கும் திறன்உள்ளவர்களுக்கு இனி இலவசமாக வழங்கப்படமாட்டாது.
தமிழகத்தில் தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழர் மீட்புப் படை ஆகிய 2 தீவிரவாத அமைப்புக்களையும்தடைசெய்ய தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த அமைப்புக்கள் இந்திய அளவில்தடைசெய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் போனஸ் குறித்து பேச்சுவதார்த்தை நடந்துவருகிறது. விரைவில் ஒரு நல்லமுடிவு எட்டப்படும் என்று அவர் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications