திருநாவுக்கரசு பா.ஜ.கவில் சேர்வது ஏன்? பின்னணித் தகவல்கள்
சு.தா. அறிவழகன்
சென்னை:
மத்திய அமைச்சர் பதவிக்காக பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைய எம்.ஜி.ஆர். அதிமுக தலைவர்எஸ்.திருநாவுக்கரசு முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அவரது எம்.ஜி.ஆர்.அதிமுக கட்சி பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைகிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைமுடித்துக் கொண்டு பிரதமர் வாஜ்பாய் வந்தவுடன் அவர் முன்னிலையில் பாஜகவில் சேருகிறார் திருநாவுக்கரசு.
1980-களில் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் நிரந்தர அமைச்சராக இருந்தவர் திருநாவுக்கரசு. பல முக்கியதுறைகளை வைத்திருந்தவர். எம்.ஜி.ஆரின் மிகுந்த நம்பிக்கைக்குரிய செல்லப் பிள்ளையாக இருந்தவர்.
ஜெ.விடமிருந்து விலகி.. சேர்ந்து...விலகி:
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்து, ஜெயலலிதாவை கட்சியின்பொதுச் செயலாளராக்கினார். ஆனால் தன்னால் பதவிக்கு வந்த ஜெயலலிதா தன்னை அவமானப்படுத்தியதால்கட்சியிலிருந்து விலகி எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தார்.
கட்சியை தள்ளாட்டத்துடன் நடத்திக் கொண்டிருந்த திருநாவுக்கரசு யாரும் எதிர்பாராத அளவுக்கு திடீரெனமீண்டும் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் நீண்ட காலம் இதுநீடிக்கவில்லை. ஜெயலலிதா இவரை அதிமுகவிலிருந்து நீக்கினார்.
மீண்டும் எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு உயிரூட்டினார். இம் முறை இக்கட்சிக்கு செல்வாக்கு கூடியது. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றது.உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வெற்றியைப் பெற்றது. தென் மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் வரைதிருநாவுக்கரசுக்கு செல்வாக்கு உள்ளது.
தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசுக்கு, அந்த சமுதாயத்தினர் மத்தியில் மிகப் பெரிய இமேஜ் உள்ளது.தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த உறுதியான, தெளிவான தலைவர் இவர் மட்டுமே என்று நம்பக் கூடிய அளவுக்குசெல்வாக்கைக் கொண்டவர் திருநாவுக்கரசு.
பாரதீய ஜனதாக் கட்சியில் திருநாவுக்கரசு சேர முடிவெடுத்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில்முக்கியக் காரணமாக கூறப்படுவது, எந்தவித பலனும் இல்லாமல் கட்சியை நடத்திக் கொண்டிருந்தால் கட்சிவளர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதும், மத்திய அமைச்சர் பதவியை வாங்குவதற்கு இதுவே ஒரே வழிஎன்பதுமே காரணம் என்கிறார்கள்.
திமுகவிடம் பட்ட அவமானம்:
கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருந்தும் கூட திமுக அணியில் உரிய மரியாதை தரப்படுவதில்லை என்ற வருத்தம்நீண்ட காலமாகவே திருநாவுக்கரசுக்கு உண்டு.
தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கட்சியினர் நினைக்கும் இடங்களை, தொகுதிகளைத்தான் திமுகதலைமையிடம் தேர்தல்களின்போது கேட்பது திருநாவுக்கரசுவின் வழக்கம். ஆனால் கேட்ட இடங்களை இதுவரைதிமுக முழுமையாக கொடுத்ததில்லை. இது திருநாவுக்கரசு மனதில் ஆறாத வடுவாக அமைந்து விட்டது.
தான் மத்திய அமைச்சராகும் முழுத் தகுதியும் இருப்பதாக நினைக்கும் திருநாவுக்கரசு அதற்கான முயற்சிகளில்இறங்கினார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி, மருமகன் மாறன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் எதிர்ப்புகாரணமாக திருநாவுக்கரசுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது குதிரைக்கொம்பாகி விட்டது.
திருநாவுக்கரசுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கொடுத்தால் அது இன்னொரு மதிமுகவாக மாறி தங்களுக்குபெரும் இடைஞ்சலைக் கொடுக்கும் என்பது திமுகவினரின் கருத்து. தனக்கு நிகராக இன்னொரு அரசியல்வாதிவளர்வதை வைகோ விரும்பவில்லை.
இருவரையும் பகைத்துக் கொள்ள முடியாத வாஜ்பாய், திருநாவுக்கரசுவை சிறிதுகாலம் பொறுத்திருக்குமாறுகூறிசமாதானப்படுத்தி வைத்தார்.
இல.கணேசன் தந்த உறுதிமொழி:
இப்படி தனது மற்றும் கட்சியின் வளர்ச்சி பல வழிகளிலும் அடைபட்டுப் போவதைப் பார்த்து வெறுத்துப்போயிருந்தார் திருநாவுக்கரசு. இந்த நிலையில்தான் தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர்இல.கணேசன், திருநாவுக்கரசிடம் ஒரு ஐடியாவைச் சொன்னார். பேசாமல் பா.ஜ.கவில் சேருங்கள், அமைச்சர்பதவியை வாங்கித் தர நானாயிற்று என்று அவர் உறுதி கொடுத்தார்.
இதையடுத்து திருநாவுக்கரசு தனதுகட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசியுள்ளார். அப்போது திருநாவுக்கரசு எடுக்கும்முடிவுக்குக் கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.
பா.ஜ.கவில் சேர கட்சிக்குள் எதிர்ப்பு:
திருநாவுக்கரசுவின் முடிவுக்கு கட்சி எம்.எல்.ஏ. ஆஸ்டின் மட்டும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.நாகர்கோவில் எம்.எல்.ஏவான இவர் முன்பு எம்.பியாக இருந்தவர். கிறிஸ்தவர்களுக்கு எதிரான பாரதீய ஜனதாக்கட்சியில் திருநாவுக்கரசு சேருவதை இவர் எதிர்த்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் தான் பா.ஜ.க. ஆய்வுக் கூட்டத்தில் திருநாவுக்கரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தற்போது கட்சியை இணைப்பது தொடர்பான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன. மத்திய அமைச்சர்அத்வானி, பா.ஜ.க. தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்துப்பேசியுள்ளார். தற்போது பிரதமர் வாஜ்பாய் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அவர் திரும்பி வந்ததும்அவர் முன்னிலையில் இணைப்பு விழா நடத்தப்படவுள்ளது.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications