திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்:
சூரபதுமனை முருகப் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை திருச்செந்தூர் அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் கடந்த 5ம் தேதி இந்தக் கோவிலில் தொடங்கியது.தினமும் காலையிலும் இரவிலும் யாகசால பூஜைகள் நடந்து வருகின்றன.
சஷ்டி விழாவின் 6வது நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையும் யாகசாலை பூஜை வழக்கம் போல்நடைபெறும். பகலில் உச்சிக் கால தீபாராதனையும், யாகசாலை தீபாராதனையும் நடைபெறும்.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருள்வார். வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களைப்பாடிக் கொண்டே மேளதாள வாத்தியங்களுடன் சுவாமியை பக்தர்கள் சண்முகவிலாசம் கொண்டு சேர்ப்பார்கள்.
அங்கு மீண்டும் பிரம்மாண்ட தீபாராதனை முடிந்த பின்னர் மாலை 3.45 மணிக்கு சூரபதுமனை வதம் செய்வதற்காகதிருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திலிருந்து சுவாமி புறப்பட்டு கடற்கரையில் எழுந்தருள்வார்.
பல்வேறு தோற்றங்களுடன் போரிட வரும் சூரபதுமனை இறுதியில முருகப் பெருமான் சம்ஹாரம் செய்வார்.அப்போது திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அலையையும் மிஞ்சும் வகையில் கூடி நிற்கும் லட்சக்கணக்கானமக்கள் "அரோகரா... அரோகரா..." என்று குரல் எழுப்புவார்கள்.
சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தை வந்தடையும் சுவாமிக்கு அலங்கார தீபாராதனைகள்நடைபெறும். இதையடுத்து கிரிப்பிரகார உலா வரும் சுவாமி மீண்டும் திருக்கோயிலை வந்தடைவார். அங்குஅவருக்கு சாயாபிஷேகமும் சஷ்டி தகடு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் இரவு சுப்பிரமணிய சுவாமி - தெய்வானையின் திருக்கல்யாணம்நடைபெறும். அதற்கும் அடுத்த நாள் இரவு தம்பதி சமேதராக தங்கமயில் சப்பரத்தில் ஊர்வலம் வந்துபக்தர்களுக்குக் காட்சியளிப்பார் சுவாமி.
சுவாமியின் சூரசம்ஹார நிகழ்ச்சியைத் தரிசிப்பதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்ஏற்கனவே திருச்செந்தூரில் குவிந்து விட்டனர். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கியநகரங்களிலிருந்து அங்கு சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
-->
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications