தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

உலகம் முழுவதும் பரவியுள்ள தீவிரவாதத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர்வாஜ்பாய் வலியுறுத்தினார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாஜ்பாய் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் அமெரிக்கஅரசு அதிகாரிகளுடன் பேசியதாவது:

இந்தியாவில் பரவி வரும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காஷ்மீர்பகுதியில் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.இதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது.

ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு இந்தியா ஆதரவு தருகிறது. அதே சமயம் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தவிதமான பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளோம்.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தானுடன் நின்றுவிடக்கூடாது. தீவிரவாத்தத்திற்கு எதிரானநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நாடுகள், மற்ற நாடுகளில் நடக்கும் தீவிரவாதத்தையும் அடக்க முயல வேண்டும்.

அவ்வாறு முயலவில்லையென்றால் தீவிரவாத்ததிற்கு எதிரான நடவடிக்கை என்பதற்கு எந்த விதமான பொருளும்இல்லாமல் போய்விடும் என்றார் வாஜ்பாய்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+