இந்தியாவின் கவலை எங்களுக்குப் புரிகிறது - அமெரிக்கா
வாஷிங்டன்:
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போராடி வரும் இந்தியாவின் கவலையை புரிந்து கொண்டுள்ளதாக அமெரிக்காகூறியுள்ளது.
அப்போது ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் போருக்கு இந்தியாவின் முழுஆதரவை ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார். இந்தப் போரில் எந்த உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகக்கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் நிருபர்களிடம் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,
தீவிரவாதிகள விஷயத்தில் இரட்டை நிலையை அமெரிக்கா கடைபிடிக்கக் கூடாது. அமெரிக்கா வந்துள்ள பிரதமர்வாஜ்பாயை, அமெரிக்கத் தலைவர்கள் மிகச் சிறப்பான முறையில் வரவேற்றது, இந்திய-அமெரிக்க உறவைஅவர்கள் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.
யாருடைய தயவும் தேவையில்லை:
தீவிரவாதத்தை வளர்த்து வரும் பாகிஸ்தானை எதிர்த்துப் போராட எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை.இருப்பினும், இந்த விஷயத்தில் எங்களுக்கு அமெரிக்கா உதவினால் மகிழ்வோம்.
அரிெக்காவின ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதத்திற்கு எதிராகநடத்தி வரும் போரில் இருந்து இந்தியா பின்வாங்காது.
மேலும், கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிற்கும்,பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய திடீர் உறவு குறித்து, இந்தியா கவலையடையவில்லை.
இதனால் இந்திய-அமெரிக்க உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்கள் உறவு இருநாடுகளுக்கும் இடையில்உள்ள பரஸ்பர மதிப்புகளினால் ஏற்பட்டது. மேலும் செப்டம்பர் 11ம் தேதி தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிலும்தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து, அமெரிக்க அரசு தீவிரமாக கவனித்து வருகிறது என்றார்ஜஸ்வந்த் சிங்.












Click it and Unblock the Notifications