சோனியா பேனர் கிழிப்பு: சென்னையில் அதிமுக-காங். தொண்டர்கள் மோதல்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேனரை சில அதிமுக தொண்டர்கள் கிழித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டமோதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
வட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பார்வையிட்டார்.ஜெயலலிதாவின் பின்னாடியே நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும் சென்றனர்.
துறைமுகம் தொகுதி கிளைவ் பாட்டரியைத் தாண்டி முதல்வர் சென்றதும், அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த அதிமுக தொண்டர்கள் சிலர் அங்கிருந்த சோனியா படம் வரையப்பட்ட பேனரைக் கிழித்துஎறிந்தனர்.
இதைக் கண்டதும் பயங்கர கோபமடைந்த அப்பகுதி காங்கிரஸ் தொண்டர்கள் ஜெயலலிதாவின் பின்னால் சென்றுகொண்டிருந்த அதிமுக தொண்டர்களை வழிமறித்து இது குறித்து கேட்டனர்.
ஆனால் அதிமுக தொண்டர்களோ ஒழுங்காகப் பதிலளிக்காமல் காங்கிரஸ் தொண்டர்களைத் திட்ட ஆரம்பித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் மோசமானவார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். நேரம் செல்லச் செல்ல இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும்சூழ்நிலை உருவானது.
தகவலறிந்த துறைமுகம் போலீசார் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். சென்னை மாநகராட்சிகாங்கிரஸ் கவுன்சிலரான ராயபுரம் மனோ உள்ளிட்ட ஏழு காங்கிரஸ் தொண்டர்களைப் போலீசார் கைது செய்தனர்.
ஆனால் அதிமுக தொண்டர்களைப் போலீசார் ஒன்றுமே செய்யவில்லை.
இந்தச் சம்பவம் துறைமுகம் தொகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-->
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications