வெடிகுண்டு புரளி: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு
மதுரை::
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்துஅங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்தவமனை மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.
கண் சிகிச்சைக்காக இந்தியா முழுவதிலுமிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து சிகிச்சைபெற்றுச் செல்வது வழக்கம்.
இவர்கள் தவிர மேலும் நூற்றுக்கணக்கான கண் நோயாளிகள் அரவிந்த் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அரவிந்த் மருத்துவமனைக்கு நேற்று இரவு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.மருத்தவமனை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் பேசிய நபர் கூறினான்.
இதையடுத்து மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கு உடனடியாகத் தகவல்தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டனர்.
இதற்குள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டு இருக்கிறதா என்று அரவிந்த்மருத்தவமனை முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர்.
ஆனால் எந்த இடத்திலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவந்த தொலைபேசித் தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரிந்ததும் மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும்,நோயாளிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
வெடிகுண்டு புரளியைக் கிளப்பியவன் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications