சென்னையில் 2 கல்லூரிகளின் மாணவர்கள் கடும் மோதல்: 4 பேர் கைது
சென்னை:
சென்னையில் உள்ள 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் நடு ரோட்டில் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.இது தொடர்பாக 4 மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
நந்தனம் கலைக் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த சிலமாணவர்களுக்கும் முன் விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் சென்னையின் மையப் பகுதியான பரபரப்பு மிகுந்த தி. நகரின் வடக்கு உஸ்மான் சாலையில் இருகல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இன்று காலை திடீரென்று கடுமையாக மோதிக் கொண்டனர்.
ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள்பதறியடித்தக் கொண்டு ஓடினர்.
தகவலறிந்து விரைந்து வந்த பாண்டி பஜார் போலீசார் மாணவர்களை விலக்கி விட்டு, அப்பகுதியில் அமைதியைஏற்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக சாந்தகுமார், சண்முகம், நந்தகுமார் மற்றும் விஸ்வாஸ் ஆகிய நான்கு மாணவர்களைப்போலீசார் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications