இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: 4 நாகை மீனவர்கள் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கைக்கடற்படையினர் கடத்திச் சென்று விட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலாயுதன் என்ற மீனவரின் மனைவி சிவகாமி மாவட்ட எஸ்.பியான மீனாட்சி சுந்தரத்திடம்புகார் கொடுத்துள்ளார்.
வேலாயுதனுடன் ரங்கநாதன், பன்னீர், சக்தி ஆகிய மூன்று மீனவர்களும் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அவர்கள் அனைவரையும் கடத்திச் சென்று விட்டதாக புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த மீனாட்சி சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications