பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 40 மாணவர்கள் காயம்: ஜெ. நிதியுதவி
சென்னை:
சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மேற்கூரை கன மழை காரணமாக சேதமடைந்து இடிந்து விழுந்தது.இதில் 40 மாணவர்கள் காயமடைந்தனர்.
கொருக்குப்பேட்டையில் உள்ள கொடுங்கையூர் காலனி பகுதியில் சி.எஸ்.ஐ. பள்ளி உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையினால் இந்தப் பள்ளியின் மேற்கூரை பலமிழந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் மேற்கூரை இடிந்து விழுந்தது.
அப்போது வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஒரு ஆசிரியரும், 40 மாணவர்களும் இடிபாடுகளுக்குள்சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. மூன்று தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து,இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
காயமடைந்த அனைவரும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தப் பள்ளி 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். எனவே பள்ளியின் சுவர்கள் அனைத்தும் மிகவும்பலவீனமானதாக உள்ளதாகப் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
ஜெ. நிதியுதவி:
இதற்கிடையே இவ்விபத்தில் காயமடைந்து, கால் முறிவு ஏற்பட்டுள்ள முதலாவது வகுப்பு மாணவன் அஜீத்தின்சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.6,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
சட்ட அமைச்சர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று சேதத்தைப் பார்வையிட்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications