காவிரி: கிருஷ்ணா மீதான தமிழக அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
டெல்லி:
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கு மீதான விசாரணைஇன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது.
தமிழக அரசு தொடர்ந்த இரண்டு அவமதிப்பு வழக்குகளும் கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தன.
இந்த அவமதிப்பு வழக்குகளை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கிர்பால் தலைமையிலானடிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை 15ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
ஆனால் அதுவரை தாங்கள் குறிப்பிட்ட அளவு நீர் தமிழகத்துக்கு எந்தத் தடையும் இல்லாமல் போய்க் கொண்டேஇருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
எங்களது இந்த உத்தரவை பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் வேண்டுமானால் திருத்திஉத்தரவிடலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நதி நீர் ஆணையம் கூடி முடிவெடுக்கலாம்.
ஆனால், அப்போது உச்ச நீதிமன்றத்தை கர்நாடகம் மதிக்காமல் நடந்து கொண்டதை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் எந்தத் தீர்ப்பையும் ஆணையம் அறிவிக்கக வேண்டும்.
மேலும், தமிழகத்தில் சம்பா பயிர் பயிரிடப்பட்டுள்ளதால் அதைக் கெடுக்கும் வகையில் நீரை இடையில் நிறுத்தும்செயல்களில் கர்நாடகம் ஈடுபடக் கூடாது.
நவம்பர் 1ம் தேதி நள்ளிரவு முதல் 6ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9,000 கன அடி நீர் தரவேண்டும்.
அதன் பின்னர் நீரின் அளவை கர்நாடகம் குறைத்துக் கொள்ளலாம். 7ம் தேதியில் இருந்து, 1991ம் ஆண்டு காவிரிநடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 6,000 கன அடி நீர் விட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை வரும் 15ம் தேதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை இந்த பார்முலாவைப்பின்பற்றி தமிழகத்துக்கு கர்நாடகம் நீர் விட வேண்டும். இந்த உத்தரவை பிரதமர் தலைமையிலான நதி நீர்ஆணையம் கூடி மாற்றிக் கொள்ளலாம். தமிழகத்துக்கு எவ்வளவு நீர் விட வேண்டும் என்பதை ஆணையம் முடிவுசெய்யலாம் என்று நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில் இவ்வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. இன்றே இறுதித் தீர்ப்பும்வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடந்த மாதம் 28ம் தேதியேநிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கவுடா நேற்று சட்ட வல்லுநர்களுடனும், வழக்கறிஞர்களுடனும்தீவிர ஆலோசனை நடத்தினார்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications