எம்.எல்.ஏ. திடீர் "விசிட்": பணிக்கு வராத அரசு டாக்டர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் பணி நேரத்தின் போது மருத்துவமனைக்கு வராத அரசு டாக்டர் உள்பட 7 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி எம்.எல்.ஏவான சிவ பெருமாள் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சமீபத்தில் திடீர் "விசிட்" அடித்தார்.

அப்போது அங்கு "ட்யூட்டி" டாக்டர் மற்றும் நர்ஸ்கள், கம்பவுண்டர்கள் என யாரையும் காணவில்லை. மருந்துவிநியோகப் பிரிவைச் சேர்ந்த ராஜு மட்டும் இருந்தார். அவரும் கூட நல்ல போதையில் இருந்தார்.

இதையடுத்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் சுகாதார அமைச்சர் செம்மலைக்கு புகார்அனுப்பினார் சிவ பெருமாள்.

நலத் துறை அமைச்சர் செம்மலையின் உத்தரவுக்கேற்ப விசாரணை நடத்திய இணை இயக்குநர் ஆறுமுகம், பணிநேரத்தின் போது கடமை தவறிய டாக்டர் தானு சுப்ரமணியன், நர்ஸ் செல்வராணி, மகப்பேறு துறை உதவியாளர்விஜயலட்சுமி, மருந்துப் பிரிவு ராஜு, டிரைவர் குமார், உதவியாளர்கள் ஜெயகர் அதிசயம், பிஜு குமார்ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

சேலம் அரசு மருத்துவமனையில் அலட்சியமாக பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 13 பேர் அதிரடியாகசஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு மறுநாளே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 7 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+