மதுரை சிறையிலிருந்து "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு"
ஐய்யப்பனுக்கு மாலை போட்டு, காவி வேட்டி கட்டி, பக்திப் பாடல்களை பாட அனுமதிக்கக் கோரி மதுரை மத்தியசிறையில் சில கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 50 கைதிகள் இக்கோரிக்கையை வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஐய்யப்ப பக்தர்களாக மாறியுள்ள இந்தகைதிகள் அனைவரும் பெண்களைக் கேலி செய்தது, பிக் பாக்கெட் அடித்தது, வழிப்பறி போன்ற குற்றங்களுக்காககைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான ஐய்யப்ப பக்தர்கள் போல காவி வேட்டி கட்டி, தினசரி இருவேளை குளித்து, பக்திப் பாடல்களைப்பாடி பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்த கைதிகள் சிறை அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சில கைதிகள் இதற்காகவே ஐயப்பன் பாடல் கேசட்டுகளையும், டேப் ரிக்கார்டர்களையும் வைத்துக் கொள்ளவும்அனுமதி கோரியுள்ளனர்.
கைதிகளின் இந்தக் கோரிக்கையை எப்படி ஏற்பது என்று தெரியாமல் சிறை அதிகாரிகள் குழம்பிப் போய்உள்ளனர். இதுவரை அவர்களுக்கு எந்த பதிலும் தராமல் இருந்து வருகின்றனர்.
இந் நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 50க்கும் மேற்பட்ட "பக்தர்கள்" உண்ணாவிரதப் போராட்டம்இருக்க முடிவு செய்தனர். ஆனால் சிறை அதிகாரிகள் தலையிட்டு பத்திப் பாட்டு வேண்டுமானால் பாடி விட்டுப்போங்கள் என்று அனுமதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மாலையில் சிறையிலிருந்து பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தைபோன்ற பாடல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன.
சக கைதிகளையும் சிறை அதிகாரிகளையும் இந்த பக்திக் கைதிகள் சாமி என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இப்போதைக்கு பாடல்கள் பாடவும் சிறைக்குள் பூஜை செய்து கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது. மாலைபோட்டு கோவிலுக்குச் செல்ல அனுமதி தரப்படுமா என்று தெரியவில்லை.
மனதில் பக்தி வந்த கையோடு இவர்கள் வாழ்க்கையிலும் திருந்தினால் சரி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications