விரைவில் கூடுகிறது காவிரி கண்காணிப்பு குழு
டெல்லி:
இம்மாத இறுதிக்குள் காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதகர்நாடக அரசு அதற்காக மன்னிப்பு கேட்டது.
ஆனால் தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் சரியான சூடு கொடுத்தது. காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரானபிரதமர் வாஜ்பாய் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து வாஜ்பாய் குறித்து தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெறுவதாக ஜெயலலிதா மத்திய அரசுக்கு ஒருகடிதத்தை நேற்று அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும் என்று மத்திய நீர்வளத் துறைஅமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தமிழக மற்றும் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து காவிரிகண்காணிப்புக் குழுவினர் ஆய்வு நடத்திய பின்னர் அக்டோபர் 2ம் தேதி தான் காவிரி கண்காணிப்புக் குழுக்கூட்டம் கடைசியாக நடைபெற்றது.
ஆனால் காவிரி ஆணையம் எப்போது கூடும் என்பது குறித்து தகவல்கள் இல்லை. ஆணையத்தை விரைவாகக்கூட்டி காவிரி விவகாரத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடந்தஒரு மாதத்தில் ஆறு முறை கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 22ம் தேதிக்குள் காவிரி ஆணையம் கூடவுள்ள தேதி குறித்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசின்வழக்கறிஞர் கிரித் ராவலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications