வேலை பார்த்த முதலாளியிடமே கொள்ளை: 5 பேர் கைது
சென்னை:
கத்தி முனையில் நகை திருடிய கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை செம்புதாஸ் தெருவில் வசித்து வருபவர் சுல்தான் இப்ராகிம். இவர் நடத்தி வரும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தவர் முகம்மது. தனது தலாளி சுல்தான் இப்ராகிமிடம் ஏராளமான பணம் மற்றும் நகைகள் இருப்பதைஅறிந்தார் முகம்மது.
இதையடுத்து தனது நண்பர்கள் ராஜா மற்றும் ஜாபரிடம் இதுகுறித்துக் கூறினார். 3 பேரும் சேர்ந்து நகை,பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்.
தங்களுடன் குமார், முத்துக்குமார், அந்தோணி, சுரேஷ், ஜான்சன், வெங்கடேஷ் ஆகியோரையும் சேர்த்துக்கொண்டனர்.
சுல்தான் இப்ராகிமின் வீட்டு நிலைமை, அவர்கள் வெளியில் செல்லும் நேரம், நகை, பணம் இருக்கும் இடம்ஆகியவை குறித்து தனது நண்பர்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார் முகம்மது.
முழுமையாக திட்டம் தீட்டிய பிறகு கடந்த 3ம் தேதி சுல்தான் இப்ராகிம் வீட்டுக்கு வந்த இக்கும்பல், வீட்டில்இருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டியது. இப்ராகிமை தாக்கிக் கட்டிப் போட்ட இவர்கள் வீட்டிலிருந்த பணம்மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதையடுத்து தனிப்படை அமைத்து போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்தத் தேடுதல் வேட்டையில் 5 பேர் பிடிபட்டுள்ளனர். ஆனால், முக்கியக் குற்றவாளியான முகம்மது இன்னும்சிக்கவில்லை. மேலும் 4 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிடிபட்டவர்களிடமிருது 38 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களிடம் ஏராளமான நகைகளும்பணமும் உள்ளது. அவர்களைப் பிடிக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications