கருணாநிதியைத் திட்டிய பன்னீருக்கு ஆற்காடு பதில்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சனம்செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்து பன்னீர்செல்வம் அறிக்கைவிடுத்திருந்தார். இதற்கு ஆற்காடு வீராசாமி பதில் கொடுத்துள்ளார்.
அதில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, காவிரி நீரை கர்நாடகம் நிறுத்தவில்லை. இரு மாநிலங்களுக்குஇடையேயும் நல்லெண்ணத்தையும், ஒத்துழைப்பையும் அவர் கடைப்பிடித்து வந்ததால் தண்ணீர் கிடைப்பதில்பிரச்சினை எழவில்லை.
ஆனால் இப்போதைய அதிமுக ஆட்சியில் தண்ணீர் நிறுத்தப்பட்டு குறுவை சாகுபடியே செய்யப்படவில்லை. சம்பாபயிருக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.
ஜெயலலிதா அரசின் மோதல் போக்கு காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல்அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஜெயலலிதா மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது புதிதல்ல. முதலில் சந்திரபாபு நாயுடுவுடன் மோதினார், பிறகுகர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் மோதினார்.
இவ்வளவு ஏன், பிரதமர் வாஜ்பாயைக் கூட கடுமையாக விமர்சித்து உச்ச நீதிமன்றத்திடம் "வாங்கிக் கட்டிக்"கொண்டார்.
அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.ஆனால் காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர், கர்நாடக முதல்வர் ஆகியோருக்கு கருணாநிதி கடிதம்எழுதியுள்ளார்.
திமுக எம்.பிக்கள் கூட வாஜ்பாயை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் கூட அதில் எடுக்கப்பட்ட முடிவை திமுக ஆதரித்துள்ளது என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
-->
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications