போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: புலிகள் மீது புகார்
கொழும்பு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆயுதங்களுடன் இரு தீவுகளுக்கு பயணம் செய்த விடுதலைப் புலிகளின் மூத்த கமாண்டர்கள்குறித்து நார்வே அமைதிக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் கடற்புலிகள் யாரும் அமைதிப் பார்வையாளர்கள் இல்லாமல் தனியே கடலில் ஆயுதங்களுடன்பிரவேசிக்கக் கூடாது.
ஆனால், புலிகளின் கிழக்கு மண்டல கமாண்டரான கருணா சமீபத்தில் முல்லைத் தீவில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ளவாகரைத் தீவுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுடன் கடலில் பயணித்தார். இவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின்சார்பில் பங்கேற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல புலிகளின் திரிகோணமலை மண்டல கமாண்டரான பதுமன் தனது ஆயுதம் தாங்கிய பாதுகாவர்களுடன் கடலில்பயணித்தார்.
கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இவர்கள் இந்தப் பயணங்களை மேற்கொண்டனர்.
இது குறித்து இலங்கை கடற்படையினர் நார்வே அமைதிக் குழுவினரிடம் புகார் தந்துள்ளனர். இதையடுத்து புலிகளின் இந்தச்செயல் குறித்து நார்வே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அமைதிக் குழுவின் செய்தித் தொடர்பாளரான டெய்டுர்டொர்கெல்சன் கூறுகையில், இச் செயல் பெரும் வருத்தம் தருகிறது. இது தொடர்பாக புலிகளின் தலைமையிடம் புகார் தரப்படும்என்றார்.
வானிலையே காரணம்?
ஆனால், வேண்டுமென்றே கடலில் பிரவேசிக்கவில்லை என புலிகள் இயக்கம் கூறியுள்ளது. இந்தப் பயணம் வழக்கமானது தான்எனவும் தங்களுடன் வர இருந்த அமைதிக் குழுவினர் மோசமான வானிலை காரணமாக வராததால் தாங்கள் தனியேசென்றதாகவும் கூறியுள்ளனர்.
புலிகளை சிறிது பொறுத்திருக்கச் சொன்னதாகவும் வானிலை சரியானவுடன் பயணம் மேற்கொள்ளலாம் என அமைதிக் குழுகூறியதாகவும் ஆனால், அதையும் மீறி புலிகள் தனியே கடல் பயணத்தை மேற்கொண்டதாகவும் அமைதிக் குழுவினர்கூறுகின்றனர்.
புலிகளின் இந்தப் பயணத்தை இரு இலங்கை கடற்படைக் கப்பல்கள் பார்த்தன. ஆனால், இதில் தலையிடவில்லை. புலிகளின்தவறை எங்களிடம் சுட்டிக் காட்டிவிட்டு அவர்கள் அமைதியாக இருந்தனர். கடற்படையினர் காட்டிய பொறுமை மெச்சத்தக்கதுஎன்றார் டெய்டுர் டொர்கெல்சன்.
அமைதியை சீர்குலைக்கும் இது போன்ற செயல்களை எந்தத் தரப்பினர் செய்தாலும் அதை நாங்கள் நிச்சயம் சுட்டிக் காட்டுவோம்,எதிர்ப்போம் என்றார்.
புலிகளின் போலீஸ் ஸ்டேசன்:
இந் நிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கவுள்ள 3வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் போலீஸ்ஸ்டேசன்கள் தேவை தானா என்று கேள்வி எழுப்புவோம் என அமைச்சர் ரவுல் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
முஸ்லீம்கள் நிறைந்த கிழக்குப் பகுதியில் இந்த போலீஸ் ஸ்டேசன்களால் அப் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு பிரச்சனைகள்உருவாகியிருப்பதாக அவர் கூறினார்.
ஓஸ்லோ பேச்சுவார்த்தைகளில் இது குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தன்னிடம்உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் தான் கிழக்குப் பகுதியில் 2 புதிய போலீஸ் ஸ்டேன்சன்களை புலிகள் திறந்தனர். மேலும் போலீசுக்கு ஆள் எடுப்பதாகவிடுதலைப் புலிகள் விளம்பரம் வெளியிட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்தப் பிரச்சனை கிளப்பப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications