நாடாளுமன்றத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகள்
டெல்லி:
நாடாளுமன்றத்தைத் தாக்க 4 தீவிரவாதிகள் மாருதி காரில் வந்து கொண்டிருப்பதாக மிரட்டல் தொலைபேசி வந்ததையடுத்துபெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே நாடாளுமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி கமாண்டோக்களும்டெல்லி போலீஸ் படையினரும் குவிக்கப்பட்டனர்.
ஆனால், காரில் வந்தவர்கள் டிராவல் ஏஜென்சி ஆட்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பதற்றம்தணிந்தது.
இன்று காலை 11.40 மணிக்கு டெல்லி போலீசின் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியநபர் ஒரு மாருதி காரில் 4 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.அந்த காரின் நம்பரையும் தெரிவித்தார்.
இதையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் உஷார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர். நகரின் முக்கிய சாலைகள் முழுவதும்தடுப்புகள் போடப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
நாடாளுமன்றத்துக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. ராணுவ கமாண்டோக்கள், டெல்லி போலீஸ்கமாண்டோக்கள் விரைந்தனர்.
இந் நிலையில் டெல்லி வருமான வரித்துறை தலைமை அலுவலகம் அருகே அந்த குறிப்பிட்ட மாருதி காரை போலீசார் மடக்கிநிறுத்தினர். அதில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் இறங்கச் செய்த போலீசார் அவர்களையும் காரையும் சோதனையிட்டனர்.
ஆனால், அதில் ஆயுதங்கள் ஏதும் இல்லை. அவர்கள் 4 பேரும் டிராவல் ஏஜென்சியொன்றில் வேலை பார்ப்பவர்கள் என்றுதெரியவந்தது.
இது யாரோ கிளப்பிய புரளியா அல்லது பாதுகாப்புப் படையினரின் உஷார் நிலையையும், படைகளின் செயல் வேகத்தையும்அறிய அரசும், உளவுப் பிரிவினரும் இணைந்து நடத்திய திட்டமிட்ட சோதனை நாடகமா என்று தெரியவில்லை.
ஆனால், இச் சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் 1 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர்பாதுகாப்பான அறைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
நாடாளுமன்றத்தின் மையக் கட்டடத்தை கமாண்டோக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications