பிக்-அப் ஆகிறது கோயம்பேடு பஸ் நிலையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தை போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் சுற்றிப் பார்த்து பயணிகளிடமும்பஸ் ஊழியர்களிடமும் அவர் குறை கேட்டார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் நேற்று முன் தினம் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

தெற்காசியாவிலேயே பெரிய பஸ் நிலையம் என்று கூறப்படும் கோயம்பேடு பேருந்து நிலையத்தால் சென்னைநகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்து விட்டாலும் பல்வேறு குறைகள் இருப்பதாக மக்கள் மத்தியில்அதிருப்தி எழுந்துள்ளது.

பயணிகள் அமருவதற்கு வசதியாக இருக்கை வசதி இன்னும் செய்யப்படவில்லை. மிகப் பெரிய பஸ் நிலையமாகஇருப்பதால் எந்த பஸ் எங்கு நிற்கும், எந்த ஊருக்கு எங்கு போக வேண்டும் என்பதை விளக்கும் அறிவிப்பாளர்வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

கோயம்பேட்டிலிருந்து, நகரின் பல்வேறு பகுதிளுக்கு நிறைய பேருந்துகள் விடப்பட வேண்டும். ரயில்நிலையங்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு விட வேண்டும்.

ஆட்டோக்காரர்கள் அதிகக் கட்டணம் கேட்பதால், முன்பதிவு ஆட்டோ கட்டணத்தை கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன் வைக்கிறார்கள்.

அதேபோல, நீண்ட தூர பஸ்களை ஓட்டி வரும் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு எடுப்பதற்கான அறைகளும்இன்னும் தயாராகவில்லை. இதனால் அவர்கள் பஸ்களை நிறுத்தி விட்டு பக்கத்திலேயே பிளாட்பாரத்தில்தான்தூங்க வேண்டியதாக உள்ளது. இதனால் தூக்கம் கெடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். விரைவில் அறைகள்தயாராகி விடும் என்று போக்குவரத்து அதிகாரிகள் கூறியிருக்கிறார்களாம்.

வந்தார் அமைச்சர்:

இந்நிலையில் அமைச்சர் விஸ்வநாதன் பஸ் நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.

அங்கு ஒவ்வொரு பிளாட்பாரத்திற்கும் சென்று பயணிகளிடம் குறை கேட்டார். பயணிகளும் தயங்காமல்தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியங்களையும் குறைகளையும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

அவர்கள் கூறிய குறைகளை அதிகாரிகளிடம் குறித்துக் கொள்ளச் சொன்னார். பின்னர் டிரைவர்கள் மற்றும்கண்டக்டர்களிடமும் குறை கேட்டார் அமைச்சர்.

பயணிகளின் குறைகளைத் தீர்த்து வைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பின்னர்நிருபர்களிடம் தெரிவித்தார்.

"பிக் அப்" ஆகிறது பஸ் நிலையம்!

இதற்கிடையே கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையம் களை கட்டத் தொடங்கி விட்டது.

கோயம்பேடு பஸ் நிலையம் இயங்கத் தொடங்கியவுடன், நகரில் இதுநாள் வரை இயங்கி வந்த பாரிமுனைவெளியூர் பஸ் நிலையம், சைதாப்பேட்டை பஸ் நிலையம் போன்றவை காலியாகி விட்டன. இந்த பஸ் நிலையங்கள்தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

கோயம்பேடு ரொம்பத் தூரமாயிற்றே என்று நினைத்த பொதுமக்கள் இப்போது அதற்குப் பழகி வருகிறார்கள்.

நெரிசல் குறைந்தது:

இதற்கிடையே கோயம்பேடு பஸ் நிலையம் இயங்கத் தொடங்கியிருப்பதால் காலியாகியுள்ள பாரிமுனைவெளியூர்ப் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் நகர பஸ்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதுநாள் வரை உயர் நீதிமன்றத்தைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு வந்த நகரப் பேருந்துகள் இனிமேல் இந்த பேருந்துநிலையங்களில் இருந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரிமுனை பகுதியில் பெருத்த போக்குவரத்து நிம்மதி ஏற்பட்டுள்ளது. மிகவும் எளிதாக வாகனங்களில்சென்று வர முடிகிறது. இப்போது இந்த முக்கிய சாலைகளில் இயங்கி வருவது, அரசு டவுன் பஸ்கள், கார்கள்,வேன்கள், டூவீலர்கள், ஆட்டோக்கள் மட்டுமே.

அதேபோல, வெளியூர் பேருந்துகளை மருந்துக்கு கூட காண முடியவில்லை என்பதால் கிண்டி முதல் அண்ணாசாலை வரை போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைந்துள்ளது. போக்குவரத்துக் காவல் துறையினரும் நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றனர்.

முதலில் பயணிகளால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் இப்போது அவர்களைக்கவர்ந்திழுக்க ஆரம்பித்து விட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்:

இதற்கிடையே கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள நெசப்பாக்கம் சாலை, அசோக் நகர்,அண்ணா மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்கள்உள்ளன.

அவற்றை அகற்றினால் மட்டுமே போக்குவரத்து எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீஸாரும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர் சாலைகள் அகலப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+