தண்டவாளத்தில் குண்டு வைத்திருப்பதாக புரளி: ஈரோடு அருகே ரயில் சேவை பாதிப்பு
ஈரோடு:
ஈரோடு அருகே ஆனங்கூருக்கும் சங்ககிரிக்கும் இடையே உள்ள ரயில் பாதையில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளதாக வந்த டெலிபோன் மிரட்டலைத் தொடர்ந்து அப்பாதையில் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு டெலிபோன் செய்து பேசிய ஒரு மர்ம நபர்,ஆனங்கூர்-சங்ககிரி ரயில் பாதையில வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு உடனடியாகப் போனைவைத்து விட்டார்.
இதைக் கேட்ட ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் தன் மேலதிகாரிக்குத் தகவல் தரவே, உடனே ரயில்வேபோலீசாருக்கும் தகவல் பறந்தது.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய்களுடன் விரைந்துசென்று ஆனங்கூர்-சங்ககிரி ரயில் பாதையில் தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் ஐந்து மணி நேரம் வரை சோதனை நடந்தும் எந்த வெடிகுண்டும் அப்பகுதியில் இருப்பது தெரியவில்லை.இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இருந்தாலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஈரோட்டிலிருந்து செல்லும் பல ரயில்களும், இங்கு வரவேண்டிய ரயில்களும் வழியிலேயே பல இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
ஆலப்புழாவிலிருந்து பொகாரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையத்தில்நிறுத்தப்பட்டது. அதேபோல் பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலும், இன்டர்சிட்டி எக்ஸ்பிரசும்ஈரோட்டில் நிறுத்தப்பட்டன. நாகர்கோவில்-மும்பை ரயிலும் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெடிகுண்டு இல்லைஎன்பதை நன்றாக உறுதி செய்யப்பட்ட பின்னரே அப்பகுதியில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications