மதுரையில் சங்கராச்சாரியார், ஜெ. கொடும்பாவிகள் எரிப்பு: 4 தலித்கள் கைது
மதுரை:
மதுரையில் காஞ்சி சங்கராச்சார் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவிகளை தலித் அமைப்பினர் எரித்தனர்.
மத மாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து வரும் காஞ்சி சங்கராச்சாரியார் தலித்களுக்கு எதிராக சில கருத்துக்களைத்தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு எதிராக புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறுதலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே மதுரையில் சங்கராச்சாரியாரின் கொடும்பாவிகளை புரட்சி வேங்கைகள் அமைப்பைச் சேர்ந்த வாலிபர்கள் இன்றுஎரித்தனர். மத மாற்றத் தடை சட்டத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவிகளையும் அவர்கள் எரித்தனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்த அந்த கொடும்பாவிகளை நீர் ஊற்றி அணைத்தனர். இது தொடர்பாக புரட்சி வேங்கைகள்அமைப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலித்களுக்கு தமிழ் பெயர்:
இதற்கிடையே தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்து மதத்தில் மரியாதை இல்லை என்பதால், சமஸ்கிருதம் சார்ந்த இந்துப்பெயர்களை தலித்கள் கைவிட்டுவிட்டு தூய தமிழில் பெயர்களை சூட்டிக் கொள்ள வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறுகையில்,
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்து மதத்தில் உரிய மரியாதை, கெளரவம், அந்தஸ்துகிடைக்கவில்லை. தொடர்ந்து கீழ் நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இந்துக் கடவுள்களின் பெயர்களை அவர்கள் காலம் காலமாக சூட்டி வந்துள்ளனர்.
இந்தக் கொடுமையை எதிர்க்கும் விதமாக, வருகிற டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளின்போது இந்துக்கடவுள் பெயர்களை வைத்துள்ள ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர், தங்களது இந்துப்பெயர்களைக் கைவிட்டு விட்டு எந்த மதமும் சேராத, தூய தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொள்வார்கள்.
இந்து மதத்தைப் புண்படுத்தி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி மீது போடப்பட்டிருக்கும் வழக்கு பொய்யானதுஎன்றார் திருமாவளவன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications