நீதிபதியை தாக்க முயன்ற சம்பவம்: 5 பா.ம.கவினர் கைது
சென்னை:
நீதிபதி தலைமையிலான செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகக் குழுவினரை பதவியேற்க விடாமல்தடுத்து கலாட்டாவில் ஈடுபட்ட வழக்கில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார்கைதுசெய்துள்ளனர்.
சென்னையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையை நிர்வகிக்க நீதிபதியொருவர் தலைமையில்இடைக்கால நிர்வாகக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.
ஆனால், இக்குழுவினரைப் பதவியேற்க விடாமல், பாமக தலைவர் ஜி.கே.மணி, காடுவெட்டி குரு எம்.எல்.ஏஉள்ளிட்ட பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் தகராறு செய்தனர். நிர்வாகக் குழுவினரை தாக்கவும் முயன்றனர்.
இது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகக் குழு செயலர் குமார் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைத்தனர்.
இதில் மணியும், குருவும் தலைமறைவாகி விட்டனர். ஜி.கே.மணி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுசெய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவரைத் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாமகவைச் சேர்ந்த ஏழுமலை, கருணாகரன், குணா என்ற குணசேகரன், பழனி மற்றும் வன்னியர்சங்கத்தைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை ஜாமீனில் வெளி வர முடியாத 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதவிர மேலும் 8பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
விரைவில் மணி, காடுவெட்டி குரு ஆகியோரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications