டிச.1 முதல் எழும்பூர்-பீச் மின்சார ரயில் ரத்து
சென்னை:
மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னைஎழும்பூர், கடற்கரை ரயில் நிலையங்களுக்கிடையே மின்சார ரயில் போக்குவரத்து டிசம்பர் 1ம் தேதி முதல் ரத்துசெய்யப்படவுள்ளது.
சென்னை தாம்பரம் முதல் எழும்பூர் வரையிலும் தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எழும்பூர்முதல் கடற்கரை வரையிலான பாதை மட்டுமே இன்னும் மீட்டர் கேஜ் பாதையாக உள்ளது. தற்போது இந்தபாதையும் அகல ரயில் பாதையாக மாற்றப்படவுள்ளது.
இதையொட்டி டிசம்பர் 1ம் தேதி முதல் எழும்பூர்-கடற்கரை வரையிலான மின்சார ரயில் போக்குவரத்து ரத்துசெய்யப்படுகிறது. டிசம்பர் 1ம் தேதிக்கு மேல் தாம்பரத்திலிருந்து எழும்பூர் வரை மட்டுமே மின்சார ரயில்கள்இயக்கப்படும்.
இருப்பினும் தாம்பரத்திலிருந்து, கடற்கரை வரையிலான அகலப் பாதை ரயில்கள் வழக்கம் போல இயங்கும்.
கடற்கரை வரை மின்சார ரயில்கள் நிறுத்தப்படுவதால், கடற்கரை வரை செல்ல வேண்டிய பயணிகளின் வசதிக்காகபஸ் வசதி செய்யப்படவுள்ளது. இதற்காக எழும்பூர் ரயில் நிலையம் அருகே தற்காலிகமாக பஸ் நிலையம்ஏற்படுத்தப்படுகிறது.
இங்கு கடற்கரை வரை மட்டுமே செல்லக் கூடிய பஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். எழும்பூர் வந்துஇறங்கும் பயணிகள் இந்த பஸ்களில் ஏறினால் அவர்கள் கடற்கரை ரயில் நிலையம் வரை செல்லலாம். இதில்பயணக் கட்டணம் ரூ.3 என நர்ணயிக்கப்பட்டுள்ளது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications