மின்சார டவரில் குண்டு வெடிப்பு: இன்னும் "க்ளூ" கிடைக்கவில்லை
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் கர்நாடகத்துக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்சார டவர் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது தொடர்பாக மேற்கொண்டு எந்தவிதமான க்ளூவும் கிடைக்காமல் போலீசார் திணறிவருகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக நான்கு தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குண்டு வெடிப்புக்குக்காரணமானவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தகர்க்கப்பட்ட மின்சார டவருக்கு அருகே கிடந்த "தமிழ் காவிரி மீட்புப் படை"யின் சில துண்டுப் பிரசுரங்களைத்தவிர வேறு எந்தவிதமான முக்கியத் தடயமும் போலீசாருக்குக் கிடைக்கவில்லை.
காவிரிப் பிரச்சனை தீரும் வரை எங்களுடைய நடவடிக்கைகள் தொடரும் என்று அந்தத் துண்டுப் பிரசுரத்தில்அச்சிடப்பட்டிருந்தது.
நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து கர்நாடகத்திற்குச் சென்று கொண்டிருக்கும் 370 மெகாவாட்மின்சாரத்தில் 25 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும் மற்றொரு பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.
மேலும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சிதறிய வெடிகுண்டுத் துகள்களை தடயவியல் நிபுணர்கள்தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
தமிழக ஐ.ஜியான எஸ். ஜார்ஜ் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையைத்தீவிரப்படுத்துமாறு போலீ"ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
"பாரதிராஜா பேரணி தான் காரணம்":
இதற்கிடையே மின்சார கோபுரம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதற்கு, நெய்வேலியில் திரையுலகினர் நடத்தியபேரணியே காரணம் என்று பாரதீய ஜனதாவின் அகில இந்திய பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கர்நாடகத்திற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்துவதற்காக விழுப்புரம் அருகே உள்ள மின் கோபுரம் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்த குண்டு வெடிப்புக்கு தூண்டுதலாக அமைந்தது சமீபத்தில் நெய்வேலியில் தமிழ்த் திரையுலகினர் நடத்தியபேரணி தான்.
இந்தப் பேரணிக்கு பா.ஜ.கவைத் தவிர அத்தனை கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. பேரணியில் வன்முறை எழலாம்என்று திமுக தலைவர் கருணாநிதி அச்சம் தெரிவித்தார். ஆனால் பேரணி அமைதியாகவே நடந்துமுடிந்தது.
பேரணியில் கலவரம் வெடிக்கவில்லை என்றாலும் கூட அதற்கு கிடைத்த வெற்றி தந்த தூண்டுதலின் காரணமாகவேசில சமூக விரோதிகள் மின் கோபுரத்திற்கு குண்டு வைத்துள்ளனர்.
இதற்குக் காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்களைமுளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார் கணேசன்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications