மாஜி திமுக அமைச்சர்களின் சொத்துக்கள்: ஆதாரங்கள் சிக்கின?
மதுரை:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் அளவிட முடியாத அளவுக்கு சொத்துசேர்த்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி திலகவதி கூறினார்.
குறிப்பாக திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த துரைமுருகன், பொன்முடி, சமயநல்லூர் செல்வராஜ், ஜெனீபர்சந்திரன் ஆகியோர் பல கோடிக்கு சொத்துக்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அதிலும் திமுக தலைமைக்கு மிக நெருக்கமான பொன்முடிக்கு பெட்ரோல் பங்குகள், ஹீரோ ஹோண்டா ஷோரூம்கள், பங்களாக்கள் என பெரும் சொத்துக்கள் உள்ளன.
துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கும் இதே போல கணக்கில் அடங்கா சொத்துக்கள் உள்ளன.வீரபாண்டி ஆறுமுகம் சேலத்தில் முக்கிய இடங்களை வளைத்துப் போட்டுள்ளார். இவரது மகன் கட்டப் பஞ்சாயத்துசெய்தே கோடிகளை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெனீபர் சந்திரன் அமைதியாக இருந்து கொண்டே தூத்துக்குடி மற்றும்அதைச் சுற்றிய பகுதிகளில் சொத்துக்களைக் குவித்துள்ளார். இவரது தந்தை பெரியசாமி மாவட்டத் தலைவராகஉள்ளார். திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்.
இவர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திலகவதிகூறியதாவது:
முன்னாள் திமுக அமைச்சர்கள் சொத்து குவித்துள்ளது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் சுதந்திரமானமுறையில் விசாரணை நடத்தி வருகிறோம்.
யாருடைய நிர்ப்பந்தம் இதுவரை எங்களுக்கு இல்லை. ஒரு சுதந்திரமான, சுயேச்சையான அமைப்பு தான்எங்களுடைய லஞ்ச ஒழிப்புத் துறை.
நீதித் துறையில் நடக்கும் ஊழல்கள், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதில், கண்டுபிடிப்பதில் தீவிரமாக செயல்பட்டுவருகிறோம். யார் தவறு செய்தாலும் அவர்களை சும்மா விட மாட்டோம்.
முன்னாள் திமுக அமைச்சர்கள் வெளிநாட்டிலும், தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் அதிக அளவில்சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். அளவிட முடியாத அளவுக்குக் கூட சிலர் சொத்துக்களைக்குவித்துள்ளனர்.
இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் நிறையவே உள்ளன. பெரும்பாலான சொத்துக்கள் பினாமி பெயர்களில் தான்உள்ளன. சிலரது வங்கிக் கணக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை சீல் வைத்துள்ளது.
விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்குத் தேவையான ஆதாரங்கள் கிடைத்தவுடன்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்திலகவதி.
துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், ஜெனீபர் சந்திரன் ஆகியோர் தவிர முன்னாள் அமைச்சர்சமயநல்லூர் செல்வராஜ் மற்றும் மதுரையின் முன்னாள் மேயர் குழந்தைவேலு மீதும் ஆகியோர் மீதுவருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் திடீரென்று தொடர்சோதனைகளில் ஈடுபட்டதும் நினைவிருக்கலாம்.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications