ஆசிரியையின் கையைப் பிடித்து இழுத்த 2 கல்வி அதிகாரிகள் கைது
மதுரை:
பள்ளி ஆய்வின் போது ஆசிரியை ஒருவரின் கையைப் பிடித்து இழுத்த 2 கல்வித்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.
மதுரை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ஆய்வுநடத்தினர்.
அப்போது ஒரு வகுப்பிற்குச் சென்ற அதிகாரிகள், அங்கிருந்த ஆசிரியையிடம் மாணவர்களின் வருகைப்பதிவேட்டைக் காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு அந்த ஆசிரியை மறுக்கவே கல்வி அதிகாரிகள் கடும் ஆத்திரமடைந்தனர்.
இதையடுத்து ஆசிரியையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இரண்டு அதிகாரிகளும் சேர்ந்து கொண்டுஆசிரியையின் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இரு கல்வி அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவிட்டது. அதன்அடிப்படையில் இரு அதிகாரிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications