இந்திய படை விமானம் தரையில் மோதி வெடித்தது
ஹைதராபாத்:
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. ஆனால், பயிற்சியாளரும் பயிற்சிபைலட்டும் பாராசூட் மூலம் குதித்துவிட்டதால் உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள துண்டிகல் விமானப் படைத் தளத்தில் இருந்து எச்.பி.டி.-32 தீபக் என்ற அந்தவிமானம் கிளம்பியது. விமானம் ஓட்டப் பயின்று வரும் விமானியை அழைத்துக் கொண்டு பயிற்சியாளர் பறந்தார்.
வவிலலா என்ற கிராமத்தின் மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அது தரையை நோக்கிப் பாயந்தது. இயைடுத்துபயிற்சியாளரும் விமானியும் உடனே பாராசூட் மூலம் வெளியே குதித்தனர்.
அந்த விமானம் நேராக வயல் வெளியில் வந்து விழுந்து வெடித்துச் சிதறியது. ஆனால், அப்போது வயலில் யாரும் இல்லாததால்உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
விபத்துக்குள்ளானது எந்த ரகத்தைச் சேர்ந்த விமானம் என்று தெரியவில்லை.
-->












Click it and Unblock the Notifications