நம் நாடு "இந்தியா" தான், "இந்துயா" அல்ல: கருணாநிதி
சென்னை:
நம் நாடு "இந்தியா" தானே தவிர "இந்துயா" அல்ல என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க மாட்டோம் என துணைப் பிரதமர் அத்வானி சமீபத்தில் கூறியிருந்தார்.இதற்கு வி.எச்.பி. உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சென்னையில் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
நம்முடைய நாடு "இந்தியா" தானே தவிர "இந்துயா" அல்ல.
மதவாதிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அத்வானி தன்னுடைய கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.அவ்வாறே இருப்பார் என்று நான் நம்புகிறேன்.
இஸ்லாமிய சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தங்களுக்குப் பிடித்தமான சமூகத் தலைவர்களை அழைத்துஇப்தார் விருந்து வழங்குவது வழக்கமான நிகழ்ச்சி. இந்த ஆண்டும் அவர்கள் அழைத்தால் நிச்சயம் பங்கேற்பேன்.
மாநிலத்தில் வறட்சி நிலவுவதாகவும், விவசாயிகள் பிரச்சனையில் உள்ளதாலும் இப்தார் விருந்தில் பங்கேற்க மாட்டேன என்றுஜெயலலிதா கூறியுள்ளார். இதே விவசாயிகள் பிரச்சனைக்காக தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி ஆகிய பண்டிககைகளைவிலக்காதவர்கள் சிறுபான்மையினரின் இப்தாரை மட்டும் விலக்கி வைப்பது ஏன்?
ஹரியாணாவில் இறந்து போன பசுவின் தோலை உரிந்த 5 தலித் இளைஞர்களை உயர் ஜாதி இந்துக்கள் கொன்றுகுவித்துள்ளார்கள். இது குறித்து காஞ்சி சங்கராச்சாரியாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பசுவை தலித் இளைஞர்கள் கொன்றதும்தவறு, தலித் இளைஞர்களை இந்துக்கள் கொன்றதும் தவறு என்று பேசியிருக்கிறார்.
இறந்த பசுவின் தோலை உரித்ததையும் தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டதையும் ஒரே கணக்கில் எடுத்துக் கொண்டுபேசியிருக்கிறார் சங்கராச்சாரியார். தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு மனம் கொதிக்க வேண்டியவர்கள் அதற்கு நியாயம்கற்பிக்கிறார்கள் என்றார் கருணாநிதி.
"இந்து" என்றால் "திருடன்" என்று ஒரு அகராதியில் போடப்பட்டுள்ளதாக சமீபத்தில் கருணாநிதி கூறியதை எதிர்த்துஅவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications