சென்னைக்குள் நுழைய தடை: எதிர்த்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வழக்கு
சென்னை:
சென்னை நகரிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாற்றும் அரசின்முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,
பொது சேவை வாகனங்களை இயக்குவதற்கான பஸ் நிலையம் கட்டும் முன்பு மண்டல போக்குவரத்துஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தின் 245வது ஏ பிரிவுகூறுகிறது.
கோயம்பேடு பஸ் நிலையத்தைப் பொறுத்தவரை, அயனாவரத்தில் உள்ள மண்டல போக்குவரத்து ஆணையரிடம்அனுமதி பெறப்படவில்லை. இதற்கான அனுமதியைப் பெற வேண்டிய சென்னை மாநகராட்சியும் அனுமதி கோரிவிண்ணப்பிக்கவில்லை.
மேலும், பஸ் நிலையத்தைக் கட்டி முடித்தவுடன், சென்னை மாநகராட்சியிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் கொடுத்திருக்க வேண்டும். அதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.
மேலும், ஆம்னி பஸ்களை தினசரி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நகருக்குள் வந்து செல்ல அனுமதிக்கவேண்டும் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்குக் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.
எனவே ஆம்னி பஸ்கள் நகருக்குள் நுழையக் கூடாது என்று அரசு போட்டுள்ள உத்தரவை செல்லாது என்றுஅறிவித்து கோர்ட் உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications