பாகிஸ்தான் பிரதமராக முஷாரபின் ஜால்ரா தேர்வு
இஸ்லாமாபாத்:
ராணுவ ஆட்சியாளர் முஷாரபின் ஜால்ராவான மிர் ஜபருல்லா கான் ஜமாலி இன்று பாகிஸ்தானின் 19வது பிரதமராகத்தேர்ந்தெடுத்தப்பட்டார்.
ராணுவத்தின் ஆதரவுடன் நிறுத்தப்பட்ட அவர் நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் 172 வாக்குகளைப் பெற்றார்.தலிபானை ஆதரிக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பஸ்லூர் ரஹ்மான் 86 வாக்குகளையும் பெனாசிர்பூட்டோவின் மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட குரேஷி 70 வாக்குகளையும் பெற்றனர்.
கடந்த மாதம் நடந்து முடிந்த தேர்தலில் தலிபான் ஆதரவு மதவாதக் கட்சி தான் அதிக இடங்களில் வென்றது. இதனால் இந்ததீவிரவாதக் கட்சிகளின் கூட்டணித் தலைவரான பஸ்லூர் ரஹ்மான் தான் பிரதமராகும் நிலை ஏற்பட்டது. ஆனால், அவரைஆட்சியில் அமர்த்த அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனால், தீவிரவாதக் கூட்டணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மிதவாதியாக இருக்கும் ஒருவரை, தான் சொல்வதைக் கேட்டுநடக்கும் ஒருவரை பிரதமராக்க வேண்டிய கட்டாயத்துக்கு முஷாரப் ஆளானார். அப்படித்தான் ஜபருல்லா கான் தேர்வுசெய்யப்பட்டார்.
இவர் இஸ்லாமிய தீவிரவாத கட்சிக் கூட்டணியில் இருந்தாலும் முஷாரபை ஆரம்பத்தில் இருந்தே முஷாரபை ஆதரித்து வந்தார்.
இதனால் அவரை பிரதமர் பதவிக்கு நிறுத்தி மற்ற கட்சியினரின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவமேநேரடியாக ஈடுபட்டது. இதற்காக பெரும் பணத்தையும் முஷாரப் செலவிட்டார். ஒருவழியாய் போதிய எம்.பிக்களை வாங்கிமுடித்துவிட்ட நிலையில் இன்று பிரதமர் தேர்வு நடந்தது.
இதில் எதிர்பார்த்தது போலவே ஜபருல்லா கான் வென்றார்.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கடந்த 1999ம் ஆண்டில் கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்தார் முஷாரப். இப்போது தனதுஆட்சி காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தானாகவே நீட்டித்துக் கொண்டுள்ளார்.
இந் நிலையில் தனது ஜால்ராவான ஜலாலியை பிரதமராக்கியுள்ளார் முஷாரப்.
-->
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications