புடின் டெல்லி வருகை: இந்தியா-ரஷ்யா புதிய பாதுகாப்பு திட்டம்
மாஸ்கோ:
இந்தியா- ரஷ்யா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 3ம் தேதி டெல்லிவருகிறார்.
அமெரிக்காவின் சவாலை சமாளிக்கும் வகையில் இந்தியா உள்ளிட்ட தனது நெருங்கிய நட்பு நாடுகளை உள்ளடக்கிய புதியபாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
வெறுமேன ஆயுதங்களை மட்டும் இந்தியாவுக்குத் தந்து கொண்டிருக்காமல் சர்வதேச அளவில் தனது பாதுகாப்பை உறுதி செய்யஇந்தியாவை உள்ளிடக்கிய புதிய பாதுகாப்பு கட்டமைப்பை ரஷ்யா உருவாக்க உள்ளது. ஆனால், இது அமெரிக்காவுக்குஎதிரானது அல்ல என ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய பாதுகாப்பு கட்டமைப்பின்படி இரு நாடுகளும் இணைந்து ஆயுத ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், இணைந்து ஆயுதங்களைத்தயாரிக்கவும், அதை இரு நாடுகளும் இணைந்தே பிறர்க்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் டிசம்பரில் டெல்லியில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. சீனாவில் இருந்து 3ம் தேதி டெல்லி வரும்அதிபர் புடின் இரு நாட்கள் இங்கு தங்கியிருப்பார். ஜனாதிபதி கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோருடன் உயர் மட்டஆலோசனை நடத்துவார்.
1960ம் ஆண்டில் இருந்தே இந்தியா- ரஷ்யா இடையே பாதுகாப்புத்துறையில் நெருங்கிய நட்புறவு இருந்து வருகிறது.
ஈராக்: அமெரிக்காவுக்கு எதிர்ப்பு:
இதற்கிடையே தனது நாட்டின் மீது பறக்கும் அமெரிக்க போர் விமானங்களைத் தாக்க ஈராக்குக்கு முழு உரிமை உண்டு எனரஷ்யா கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஈராக்கின் பல்வேறு ரேடார் மையங்களை அமெரிக்க போர் விமானங்கள் மீண்டு தாக்க ஆரம்பித்துள்ளன.இந்த விமானங்களை ஈராக்கின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் சுட்டு வருகின்றன. ஆனால், இதை அமெரிக்கா கண்டித்துள்ளது.
தனது விமானங்களைத் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளது. இந் நிலையில் அமெரிக்கவிமானங்களைத் தாக்க ஈராக்குக்கு முழு உரிமை உண்டு என ரஷ்யா தெரிவித்துள்ளது.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications