சிறுமுகை காட்டில் யானை மிதித்து வனத் துறை காவலர் பலி
மேட்டுப்பாளையம்:
சிறுமுகை காட்டுப் பகுதியில் வனத் துறை காவலர் ஒருவர் யானை மிதித்து பரிதாபமாக பலியானார்.
இந்தக் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகத் தகவல் வந்தது.
இதையடுத்து 11 பேர் கொண்ட வனத் துறை ஊழியர்களும் காவலர்களும் காட்டுக்குள் சென்று இது குறித்துசோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது பெட்டிக்குட்டை பகுதியில் ஒரு பெரும் யானைக் கூட்டம் அவர்களை நோக்கி திமுதிமுவென்று ஓடிவந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்ததும் வன ஊழியர்கள் அனைவரும் பதறி, சிதறி ஓட ஆரம்பித்தனர். இவர்களில் சுரேந்திரராஜாஎன்ற வனக் காவலர் மட்டும் அப்படி ஓடும் போது திடீரென்று ஒரு கல் தடுக்கி கிழே விழுந்து உருண்டார்.
அவர் மீண்டும் எழுந்து தப்பி ஓடுவதற்குள் அவரை மடக்கிய ஒரு யானை, தன் துதிக்கையால் சுரேந்திரராஜாவைத்தூக்கி எறிந்து மிதித்து நசுக்கியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தார்.
பின்னர் அவருடைய உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்டது.
யானை மிதித்து அவர் இறந்த சம்பவம் வன ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications