உச்ச நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்ப கர்நாடகம் புதிய டெக்னிக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்ப கர்நாடக முதல்வர் கிருஷ்ணா புதிய டெக்னிக்கை காையாளமுயன்றுள்ளார்.

காவிரி ஆணையத்தின் மீதும், பிரதமரின் மீதும் நம்பிக்கை உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதிவிட்டதால் காவிரிதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடகம் மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழகத்துத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்து வந்ததையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீரைத் திறந்துவிட உத்தரவிட்டது. ஆனால், நீரைத் தர கர்நாடகம் மறுத்தது. இதையடுத்துகிருஷ்ணா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அப்போதும் நீர் தர மறுத்தார் கிருஷ்ணா. என்ன ஆனாலும் சரி நீர் தர மாட்டோம் என்று கூறிவிட்டு பாதயாத்திரை நடத்தினார்.இதையடுத்து அவர் மீது இரண்டாவது அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கின் மீது நடந்த விசாரணையில் கர்நாடக அரசை உச்ச நீதிமன்றம் தாளித்தது. நீதிபதிகளின் கடும் கோபத்தால்கர்நாடக அரசு பணிந்தது. உடனே நீரையும் திறந்துவிட்டது.

ஆனால், இன்னும் அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அவமதிப்பு வழக்குகளின் தீர்ப்பு இன்னும் நிலுவையில்தான் உள்ளன.

இதற்கிடையே காவிரி விவகாரத்தில் பிரதமர் நடுநிலையுடன் செயல்படவில்லை, ஆணையத்தால் எந்தப் பயனும் இல்லை எனமுதல்வர் ஜெயலலிதா வாஜ்பாய்க்கு கடிதம் எழுதியிருந்தார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் பிரதமருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதிய ஜெயலலிதாவை நீதிபதிகள் கண்டித்தனர்.

இதையடுத்து பிரதமர் மற்றும் காவிரி ஆணையத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக பதில் கடிதத்தை அனுப்பி நீதிமன்றத்தின்கோபத்தில் இருந்து தப்பினார் ஜெயலலிதா.

இப்போது ஜெயலலிதா எழுதிய இந்த சமரச கடிதத்தை வைத்தே காவிரி விவகாரத்தில் தன் மீதான அவமதிப்பு வழக்கில் இருந்துதப்ப கிருஷ்ணா நினைக்கிறார்.

இதனால் தமிழகம் இதுவரை தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி இன்று கர்நாடகஅரசு ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையே கர்நாடகத்தின் மீதான அவமதிப்பு வழக்குகளை வரும் 29ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+