ஈரோடு அருகே மலைக் கோவிலில் முருகன் சிலை உடைப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவில் உள்ள கோவிலில் முருகன் சிலை உடைக்கப்பட்டுள்ளது. அதன் தலை உடலில் இருந்துதனியே உடைத்துப் போடப்பட்டுள்ளது.
எலத்தூரை ஒட்டிய மலையின் மீது அமைந்துள்ளது இந்த நாகமலை முருகன் கோவில். இக் கோவிலுக்கு பக்தர்கள் வருவது சமீபகாலத்தில் குறைந்துவிட்டது. இதனால் அறநிலைத் துறை தான் தினமும் ஒரு கால பூஜையை நடத்தி வருகிறது.
இக் கோவிலில் மூலவர் முருகன். கர்ப்பகிரகத்தில் விநாயர் சிலையும் சண்முகர் சிலையும் உள்ளன. இந்தக் கோவிலில் மந்திரிகவுண்டர் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கூட தினமும் கோவிலுக்குச் செல்வதில்லை என்று தெரிகிறது.
சில நாட்களுக்கு முன் இவர் கோவிலைத் திறந்து பார்த்தபோது மூலவரான முருகப் பெருமானின் சிலை உடைக்கப்பட்டிருந்தது.அதிர்ச்சியடைந்ச பூசாரி உடனே காவல் நிலையத்தில் புகார் தந்தார்.
சிலையின் தலையும் உடல் பகுதியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. தனியே உடைத்து எடுக்கப்பட்ட சிலையின் தலையில்காது பகுதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிலையின் பீடத்தையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது.
கோவிலின் கூரையும் சேதமடைந்துள்ளது. மின் வயர்களும் கூட பிய்த்து எரியப்பட்டுள்ளன.
கோவிலில் கொள்ளை அடிக்க வந்த கும்பல் தான் ஏதும் கிடைக்காத ஆத்திரத்தில் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் என்றுகருதப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் தடயவியல் நிபுணர்களும் கோவிலுக்கு வந்துசோதனை நடத்தினர்.
சேதமடைந்த கோவிலை அறநிலையத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
-->
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications