ஐயப்ப பக்தர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை 50 நாள் இலவச மருத்துவ முகாம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இந்தியா முழுவதிலுமிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்காக அப்பல்லோ மருத்துவமனை பம்பாவில் 50 நாள்இலவச மருத்துவ முகாமை நடத்தவுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நாடுமுழுவதிலுமிருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்வார்கள்.

இவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக அப்பல்லோ மருத்துவமனை சிறப்பு மருத்துவ முகாமை நடத்த ஏற்பாடுசெய்துள்ளது.

அதன்படி பம்பாவில் வரும் 28ம் தேதி முதல் 50 நாட்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்த அப்பல்லோமருத்துவமனை முடிவு செய்துள்ளது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கமும் இதற்கு உதவுகிறது.

இந்த மருத்துவ முகாமில் ஐந்து படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்படவுள்ளது.

மேலும் "டெலிமெடிசின்" வசதியும் பம்பா சிறப்பு முகாமில் ஏற்படுத்தப்படவுள்ளது. ஏதாவது முக்கியமான சிகிச்சைஅளிக்க வேண்டி வந்தால் அதற்காக சென்னை, மதுரை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோமருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் தொலைபேசி மூலமாகவே இங்குள்ள டாக்டர்களுக்கு இதற்கானஆலோசனைகளை வழங்குவார்கள்.

அனைத்து மருத்துவ வசதிகளுமே பக்தர்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+