தமிழகத்தில் மீண்டும் கன மழை எச்சரிக்கை
சென்னை:
வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும்என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் இந்த மாதத் துவக்கத்தில் தான் ஒரு புயல் மையம் கொண்டு தமிழகத்தைப் பயமுறுத்தியது. இதன்விளைவாக மாநிலம் முழுவதும் பலத்த மழையும் பெய்தது. தலைநகரான சென்னையும் நாசக்காடாகியது.
ஆனாலும் பின்னர் புயல் ஆந்திரா, ஒரிசா வழியாகச் சென்று மேற்கு வங்காள மாநிலத்தில் கரை கடந்து, பலஉயிர்களைப் பலி வாங்கியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இந்தப் புயல் சின்னம்தற்போதும் ஆந்திராவை நோக்கித் திரும்பியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் கூறுகிறது.
இருந்தாலும் இந்தப் புயல் சின்னம் காரணமாக வடக்கு தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழைபெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுநிலையம் தெரிவித்துள்ளது.
கடல் மிகவும் கொந்தளிப்புடன் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம்என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications