கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெற கர்நாடகம் முடிவு
பெங்களூர்:
பெரியார் திராவிட இயக்கத்தின் தலைவரான கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெற கர்நாடக அரசுமுடிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் நாகப்பாவை விடுவிப்பதற்காக கொளத்தூர் மணியைத் தான் வீரப்பனிடம் தூதராக அனுப்பவேண்டும் என்று நேற்று நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து நேற்று மாலை நடந்த கர்நாடகஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் கர்நாடக செய்தி அமைச்சர் காகோடுதிம்மப்பா மற்றும் சட்ட அமைச்சர் சந்திரே கெளட ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, மனிதாபிமான அடிப்படையில் நாகப்பாவைபத்திரமாக மீட்பதற்காக கொளத்தூர் மணியையே தூதராக அனுப்ப அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொளத்தூர் மணி மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று அவரை விடுதலை செய்வதுஎன்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர்கள்கூறினர்.
கொளத்தூர் மணியைத் தான் தூதராக அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் பிடிவாதமாக உள்ளதால் அவர் மீதானவழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற முடிவு செய்து விட்டது கர்நாடக அரசு.
இந்நிலையில் கொளத்தூர் மணியின் வழக்கறிஞர் துரைசாமியும், அவருடைய தம்பி பழனிச்சாமியும் இன்றுபெங்களூர் விரைந்தனர். கொளத்தூர் மணியை விடுவிப்பது குறித்து கர்நாடக அரசு உயர் அதிகாரிகளிடம்அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications