இலங்கை: நாளை ஓஸ்லோவில் நிதி திரட்டும் மாநாடு
ஓஸ்லோ:
வடக்கு இலங்கையின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் மாநாடு நாளை நார்வேயின்தலைநகரான ஓஸ்லோவில் நடைபெறுகிறது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமாதானப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, தற்போதுசமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு இலங்கையில் அவர்களுடையகுடியிருப்புப் பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதி திரட்டும் மாநாடு ஒன்றுக்கு நார்வே தூதுக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தங்களுடைய நாட்டின் தலைநகரான ஓஸ்லோவிலேயே இந்த மாநாடு நடைபெறும் என்றும் நார்வே தூதுக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி நாளை ஓஸ்லோவில் இம்மாநாடு நடைபெறுகிறது.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகள் கலந்து கொள்கின்றன.
இந்தியாவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு விரும்பியது. இதைவலியுறுத்துவதற்காக இலங்கை பொருளாதாரச் சீரமைப்புத் துறை அமைச்சரான மெலின்டா மொரகோடாசமீபத்தில் டெல்லி சென்றார்.
ஆனால் அவரைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா, ஏற்கனவே வடக்கு,கிழக்கு இலங்கையின் சீரமைப்புப் பணிகளுக்காக இந்தியா நிதியுதவி அளித்ததை மொரகோடாவிடம் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஓஸ்லோ மாநாட்டில் நார்வே நாட்டுக்கான இந்தியத் தூதர் கோபாலகிருஷ்ண காந்தி பங்கு கொள்வார்என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
அதாவது, வழக்கமாக இதுபோன்ற மாநாடுகளில் ஒரு நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களும் கலந்துகொள்வது வழக்கம். அவர்கள் பார்வையாளர்கள் பகுதியில் தான் பொதுவாக அமர்ந்திருப்பார்கள்.
அது போலவே இந்தியத் தூதரும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார் என்று யஷ்வந்த் சின்ஹா கூறாமல்கூறிவிட்டார்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் நாங்கள் புலிகளுடன் நெருங்கி வருவதாக அர்த்தம்கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவின் தீவிரவாதிகளின் பட்டியலிலும் புலிகளின் பெயர் தொடர்ந்து இருக்கும் என்று இலங்கைக்கானஅமெரிக்கத் தூதர் ஆஷ்லே வில்லிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சரான ரிச்சர்டு ஆர்மிடேஜ் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications