குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்: பரிமளா மிரட்டல்
பெங்களூர்:
தன் கணவரும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான நாகப்பாவை வீரப்பன் பிடியிலிருந்து உயிருடன்மீட்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பரிமளா கடும் கோபத்துடன் அம்மாநிலமுதல்வர் கிருஷ்ணாவிடம் கூறினார்.
சமீபத்தில் கேசட் அனுப்பியிருந்த வீரப்பன் அதில் பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணியைத்தூதராக அனுப்பாவிட்டால் நாகப்பாவைக் கொன்று விடப் போவதாக மிரட்டியிருந்தான்.
இதைக் கேட்டு நாகப்பாவின் குடும்பத்தினர் மிகவும் பயந்து போயினர். இதையடுத்து கிருஷ்ணாவைச் சந்தித்தநாகப்பாவின் குடும்பத்தினர், வீரப்பன் தற்போது கோபத்துடன் கெடு விதித்திருப்பதால் எங்களுக்குப் பயமாகஇருக்கிறது என்றனர்.
நாகப்பாவை பத்திரமாக மீட்டு விடுவோம், பொறுமையாக இருங்கள் என்று அவர்களிடம் கிருஷ்ணா கூறினார்.
"நீங்கள் இப்படியே ஒவ்வொரு முறையும் கூறுவது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என் நிலையில்நீங்கள் இருந்து பார்த்தால் தான் நாங்கள் படும் வேதனை உங்களுக்குத் தெரியும்" என்று கிருஷ்ணாவிடம்நேருக்கு நேராகவே பரிமளா பேசினார்.
மேலும், "இந்தக் கேசட்டுக்குப் பிறகும் கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்பி என் கணவரை மீட்காவிட்டால்நாங்கள் குடும்பத்துடன் உங்கள் வீட்டு முன்பாக தற்கொலை செய்து கொள்வோம்" என்றும் கிருஷ்ணாவிடம்பரிமளா கோபத்துடன் கூறினார்.
இவ்வாறு சொல்லிவிட்டு மளமளவென்று தன் குடும்பத்தினருடன் பரிமளா வெளியே சென்று விட்டார்.
இதனால் ஆடிப் போன கிருஷ்ணா சிறிது நேரம் அதிர்ச்சியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். அங்கிருந்த வேறுசில அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்புடன் நின்றுகொண்டிருந்தனர்.
இதையடுத்தே எப்படியேனும் கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்புவது என்று கிருஷ்ணா முடிவு செய்தார்.
பின்னர் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், அமைச்சரவைக் கூட்டத்திலும் இதே முடிவு எடுக்கப்பட்டது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications