கொளத்தூர் மணி விடுதலை ஆவதில் சிக்கல்
பெங்களூர்:
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்தால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடரப் போவதாக கர்நாடக முன்னாள் போலீஸ் அதிகாரி அப்துல் கரீம் மிரட்டியுள்ளார்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடம் இருந்து விடுவிப்பதற்காக கொளத்தூர் மணியைகாட்டுக்குள் தூதராக அனுப்ப கர்நாடக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான முயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெற்றால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து, தடை வாங்குவேன் என்று அப்துல் கரீம் மிரட்டியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது, வீரப்பனின் மிரட்டலுக்குப்பணிந்து சில தடா கைதிகளை விடுதலை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்தது.
அப்போது அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடா கைதிகளை விடுவிக்கக் கூடாது என்றுதடை வாங்கினார் அப்துல் கரீம்.
தற்போதும் அது போலவே கொளத்தூர் மணி மீதான வழக்குகளை கர்நாடக அரசு வாபஸ் பெறுவதற்கு அப்துல்கரீம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெற்று, அவரை விடுதலை செய்வதில் கர்நாடகஅரசுக்குச் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் நாகப்பாவை மீட்பது மேலும் தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே அப்துல் கரீமைசமாதானப்படுத்தும் முயற்சியில் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இறங்கியுள்ளன.
இந்நிலையில் அப்துல் கரீமை சத்தூர் மடாதிபதியான ஸ்ரீசிவராத்திரி தேசிகேந்திர சுவாமி என்பவர் சந்தித்தார்.கொளத்தூர் மணி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கப் போகும்முயற்சியைக் கைவிட வேண்டும் என்று அப்துல் கரீமிடம் மடாதிபதி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக அப்துல் கரீமைச் சந்தித்த நாகப்பாவின் மனைவி பரிமளா மற்றும் குடும்பத்தினரும், தயவு செய்துகர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுக்க வேண்டாம் என்று அவரிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து அப்துல் கரீம் தன்னுடைய பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வார் என்றே தெரிகிறது.
அப்துல் கரீமின் மகன் அப்துல் ஷகீல் என்பவர் வீரப்பன் கும்பல் வைத்த கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தவர்என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் ஷகீலும் ஒரு போலீஸ் அதிகாரி தான்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications