ஓஸ்லோவில் ரணில்-பாலசிங்கம் சந்திப்பு
ஓஸ்லோ (நார்வே):
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கமும் இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவும் நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் சந்தித்துப் பேசினர்..
வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் பகுதிகளை சீரமைப்பதற்காகசர்வதேச நாடுகளிடமிருந்து நிதி திரட்டுவதற்காக நார்வே அரசு ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தது.
இன்று ஓஸ்லோவில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்டசுமார் 40 நாடுகள் கலந்து கொள்கின்றன. இலங்கையின் சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நாடுகள்நிதியுதவிகளையும் அளிக்கவுள்ளன.
இந்நிலையில் ஓஸ்லோ வந்து சேர்ந்த பாலசிங்கமும் ரணிலும் நேற்றே சிறிது நேரம் சந்தித்துப் பேசினர். இங்குள்ளஹோல்மேன்கொல்லன் என்ற ஹோட்டலில் வைத்து இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேச்சுநடத்தினார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் வரை அவர்கள் இருவரும் நிருபர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இருந்தாலும் பாலசிங்கமும் ரணிலும் இன்று மீண்டும் அதிகாரப்பூர்வமாகச் சந்திக்கவுள்ளனர். நிதி திரட்டும் மாநாடுமுடிந்த பின்னர் இந்தச் சந்திப்பு நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1990ம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபரான ரணசிங்கே பிரேமதாசாவை பாலசிங்கம் சந்தித்துப்பேசினார். ஆனால் அந்தப் பேச்சு தோல்வியடைந்தது (பின்னர் 1993ம் ஆண்டு புலிகளாலேயே பிரேமதாசாகொல்லப்பட்டார்).
அதன் பின்னர் இலங்கையின் மூத்த தலைவர் ஒருவரை பாலசிங்கம் சந்தித்துப் பேசியிருப்பது இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஓஸ்லோவில் இன்று காலை மாநாடு தொடங்கியது. இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில்மீண்டும் இயல்பு நிலை திரும்புவதற்குத் தேவையான அரசியல் மற்றும் பொருளாதார உதவிகளை அளிக்கவேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் புலிகளும் இலங்கை அரசும் கூட்டாகக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மாநாட்டில் 39 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களில்பெரும்பாலானவர்கள் துவக்க விழாவில் மட்டும் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். அவர்களுடையநாடுகளில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.
இந்தியா பங்கேற்ப சுவாமி எதிர்ப்பு:
இதற்கிடையே ஓஸ்லோவில் இன்று நடைபெறும் நிதி திரட்டும் மாநாட்டில் இந்தியா எந்தப் பிரதிநிதியையும்அனுப்பக் கூடாது என்று ஜனதா தள தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் ஓஸ்லோமாநாட்டில் இந்தியா சார்பில் எந்த ஒரு பிரதிநிதியும் கலந்து கொள்ளக் கூடாது என்று அம்மனுவில் சுவாமிகுறிப்பிட்டுள்ளார்.
இம்மனு மீதான விசாரணை இன்று பிற்பகலிலேயே நடைபெறும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications