"எதிரிகளுக்கு ரத்த அபிஷேகம் செய்வோம்": கோர்ட்டில் தீவிரவாதிகள் கோஷம்
தருமபுரி:
"எங்களுடைய தோழர்களைப் போலீசார் கொன்று குவிக்கின்றனர். அடக்குமுறைக்கு நாங்கள் பணியமாட்டோம்.எதிரிகளுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்வோம்" என்று கைது செய்யப்பட்ட நக்சலைட் தீவிரவாதிகள் நீதிமன்றவளாகத்தினுள் கோஷம் போட்டனர்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் மூன்று பேர் நேற்று ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி அசோகன் உத்தரவிட்டார்.
பின்னர் மற்ற தீவிரவாதிகளை நேற்று மாலை போலீசார் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கை நிருபர்களைக் கண்டதும் தீவிரவாதிகள் கோஷம் எழுப்பத்தொடங்கினர்.
"தமிழகத்தில் யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அனைவருக்கும் வேலை கொடுத்தே ஆக வேண்டும். எங்கள்தோழர்களைப் போலீசார் கொன்று குவிக்கின்றனர்.
இந்த அடக்குமுறைக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்களை யாராலும் அடக்க முடியாது.
எதிரிகளுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்வோம். போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிவாவுக்கு வீர வணக்கம்.அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவோம்" என்று தீவிரவாதிகளில் ஒருவரான மதுரை சுரேஷ் கோஷம்போட்டார்.
ஊத்தங்கரை நீதிபதி அப்போது அங்கு இல்லாததால் தீவிரவாதிகள் அனைவரும் அரூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அங்கு இப்போது பெண் தீவிரவாதிகள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். சத்யமேரி, ஜெயந்தி மேரி, ரீட்டா மேரிமற்றும் ஆனந்தி ஆகிய நான்கு பெண் தீவிரவாதிகளும் "தியாகி சிவா வாழ்க" (?) என்று சத்தம் போட்டு கோஷம்எழுப்பினர்.
இவர்களில் ஆனந்தியைத் தவிர மற்ற மூன்று பெண்களுமே மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சுரேஷ், தங்கபாண்டியன் ஆகிய இரண்டு ஆண் தீவிரவாதிகளும் மதுரையைச் சேர்ந்தவர்கள் தான்என்பதும் தெரிய வந்துள்ளது.
தீவிரவாதிகளில் ஒருவன் ஹோமியோபதி டாக்டர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் அனைவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-->
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications